Thursday, July 26, 2007

ஜெயகாந்தன் / ஒரு நாள் ஒரு பொழுது! - தாஜ்


ஜெயகாந்தன் / ஒரு நாள் ஒரு பொழுது!
-------------------------------------------------------
*
- தாஜ்
*
தி. ஜானகிராமனை சந்தித்து உரையாடிய அதே தினத்தில் ஜெயகாந்தனையும் சந்தித்தேன்! தி.ஜா.வை காலையில் என்றால் ஜே.கே.வை மாலையில்! 1982ம் ஆண்டு, நவம்பர் மாதம்! என் இலக்கிய குளிரின் முன் அனுபவக் காலம்! முன்தைய மாதங்களில் செளதியில் சிற்றிதழ் நடத்தி, அதனூடான சாரலில் நனைந்த 'ஜில்லாப்பு' வேறு! அன்றைய மாலைப்பொழுது ரம்மியமாகவே தெரிந்தது. ஜே.கே. குறிப்பிட்ட அவரது அலுவலக முகவரியை நண்பனின் உதவியோடு கண்டடைந்தேன்.
*
எனது சிற்றிதழுக்காக, ஓர் நேர்காணல்வேண்டி ஜே.கே.யிடம் அனுமதி பெற்றிருந்தேன். அந்த அனுமதி அத்தனை சீக்கிரம் தகை த்துவிடவில்லை! சௌதியில் இருந்து அது குறித்து கடிதம் எழுதியபோதும், ஊர் வந்திருந்த நாளில் நினையூட்டித் தபால் எழுதிய போதும், அவரிடமிருந்து ஒரு பதிலும் இல்லை. தி.ஜா.வை சந்திக்க சென்னைக்குப்போன தினத்தில், டெலிபோனில் அவரைப் பிடித்தேன். என் கடிதங்களை ஜே.கே. நினைவுக்கூர்ந்தார்! வாருங்கள் என்றார்! அன்றைக்கே, மாலைப் பொழுதில் ஒரு நேரத்தையும், தனது அலுவ லக முகவரியையும் சொன்னார்!
*
ஜே.கே.வை இப்படி இலக்கிய கோதாவில் நேர்சந்திப்பது இதுதான் முதல் முறை. என்றாலும், அவரை இதற்கும் முன் சில தடவை கள் பார்த்ததுண்டு. அவரது சில சிறுகதைகளையும், ஓரிரு நாவல்களையும் கல்லூரிக் காலங்களில் படித்ததினாலான பிம்பம் மனதில் தங்கியதைவிட, ஆனந்த விகடனில் எழுதும் தலைச்சிறந்த எழுத்தாளர்; தலைவர் காமராஜ் பக்கம் நின்று பேசுகிறார் என்கிற பிம்பம்தான் ஓங்கி இருந்தது. அப்பொழுது அவர், காமராஜின் தூதராக தமிழகம் முழுவதும் கூட்டங்கள் பேசிக்கொண்டு இருந் தார். அப்படி ஓர் கூட்டம் பேச சிதம்பரத்திற்கு வந்திருந்தபோது, அண்ணா மலை யூனிவர் சிட்டி கெஸ்ட் ஹவுஸில் அவருக்கு ஒரு பகல் பூராவும் ஜாகை அமர்த்தப் பட்டிருந்தது. நான் என் சக மாணவர்களோடு சென்று, அவரை அங்கு வைத்து சந்தித்து, கொஞ்சம்போல உரையாடியதுண்டு. அந்த உரையாடல் அரசியல் சம்பந்தப்பட்டது. மாணவர்களது பார்வையில் பேசப் பட்ட எங்களது அரசியல் பேச்சை, தூக்கியெறிந்தப்படி கணீரென்றுப் பேசினார்.
*
அண்ணாமலை மாணவர்களில் பெரும்பகுதியினர், அன்றைக்கு காமராஜ் வாழ்க என்கிற ரகம்! கூடவே, உலகத்திலேயே சிவாஜிதான் உயர்ந்த நடிகர் என்றும் சத்தியம் செய்வார்கள்! அதில், என் சத்தியம் உணர்ச்சிக் கொந்தளிப் பானது! அந்த அழகில்தான் இருந்திருக்கும் அன்றைக்கு அவரோடான எங்க ளது அரசியல் பேச்சும்! அவர் எங்களை தூக்கியெறிந்துப் பேசியது சரியென்று புரிய காலங்கள் ஆனது!
*
புனைக் கதைகளின் மேல் ஆர்வமும், நல்ல எழுத்தை தேடிப் படிப்பதில் நாட்டமும் கொண்ட என் சமகால 'எழுத்து' விரும்பிகள்மாதிரி, நானும் என் நல்ல எழுத்தின் தேடலை ஜெயகாந்தனில்தான் தொடங்கினேன்! அவரை முட்டமுட்டப் படித்தப் பிறகுதான்(அவரது எல்லா எழுத்துக்களையும் படித்திருக்கிறேன் என்கிற அர்த்தத்தில் அல்ல) பிற படைப்பாளிகள் எல்லாம் பரிச்சயம். ஜே. கே.யை படித்தக் காலத்தில், கா.நா.சு, தி.ஜானகிராமன், எம்.வெங்கட்ராமன், மௌனி, நகுலன், ஜி.நாகராஜன், புதுமைப்பித்தன், சுந் தரராமசாமி, கி.ராஜ நாராயணன், அசோகமித்திரன் என்போர்களில் ஒருவரது பெயரும் கூட அறிந்தவனில்லை நான்!
*
அன்றைக்கு கைக்கெட்டிய தூரத்திலெல்லாம் ஜெயகாந்தன்தான் கிடைப்பார். தடங்களே இருக்காது.வாசிக்க விரும்பும் ஜே.கே.யின் புத்தகங்கள் சக நண்பர்களிடம் கிடைக்காவிட்டாலும், கட்டாயம் பெண் நண்பர்களிடம் கிடைத்து விடும்! அவர்கள் ஜே.கே.யின் கதைகளையும், நாவல்களையும் சேகரிப்பதில் ஒருவருக்கொருவர் போட்டி கொண்டவர்களாகவும் இருந் தார்கள்! வாரப் பத்திரிகை யில் தொடராக வந்த அவரது கதைகள், நாவல்கள் அத்தனையையும் படித்தப்பின் தனியே யெடுத்து, தைத்து பைண்ட் செய்யப் பட்ட தொகுப்புகளாக பாதுகாத்தும் வைத்திருப்பார்கள். அன்றையக்கு ஜெய காந்தனின் கீர்த்தி அப்படியோர் உச்சத்தில்!
*
அன்றைக்கு, வேலைக்குப்போகிற பெண்களின் கைப்பையில் தயிர்சாதமும் மாங்காவடு ஊறுக்காயும் தட்டிப் போனாலும், ஜே.கே. யின் கதைப்புத்தகம் ஒன்று அதில் தட்டாது என்கிற அளவுக்கு நம் படித்தப்பெண்கள் அவரது கதையோடவே போவார்கள், வரு வார்கள்! அவர்களிடம் புத்தகம் வாங்கிப் படிக்க வேண்டியாகிலும் ஜே.கே.யின் கதைகளை, நாவல்களை இரண்டாம் முறை மூன்றாம் முறையெனப் படித்த அனுபவங்களும் உண்டு! இந்தப் பெண்களும் சும்மாவேணும் ஜே.கே.யின் புத்தகங்களை படித்து விடவில்லை. அவர்களுக்காக ஜே.கே. தனது கதைகளில் எத்தனை எத்தனை 'லாஜிக்'குகள் பேசி அவர்களின் நவீனப் போக்குகளை, தடையுடைப்புகளை எத்தனை இடங்களில் நியாயப்படுத்தியிருக்கிறார்!
*
'அக்கினிப் பிரவேசம்' கதையில், அலுவலகம் போகும் சின்ன வயதுப் பெண் ஒருத்தி கற்பு ரீதியான சம்பிர தாயக் கட்டுகளில் இருந்து வழுவிவிட, அவளுக்காக, அல்லது அவளையொ த்த சிலருக்காக அவர் செய்திருக்கும் வாதமும், தீர்வும் சாதாரணமானதா என்ன? பெண்களில் எவருக்குத்தான் அது இஷ்டமில்லாது போகும்?
*
ஜெயகாந்தனின் கதைக்களம் பெரும்பாலும் நகர் புறம் சார்ந்த, பின் தங்கியப் பகுதிகள் என்றால் பெரிய தவறென்று ஆகிவிடாது. அந்தப் பகுதிகளில் வாழும் பாவப்பட்ட மக்கள், தங்களது சுயகுணாதிசயங்களோடும் சொந்தப் பிரத்தியோக மொழியோடும் அவரது கதைக்களில் சகஜமாவார்கள். ஜே.கே.யின் கதைவழியாக, அந்த மக்களை வாசிக்கும் வாசகர்கள், திடுமென இன்னொரு உலக த்தின் கதவுகளைத் திறந்துப் பார்க்கும் உணர்வும் கொள்வார்கள்! அந்த மக்கள் பேசும்மொழி, சுயகுணாதிசயங்கள் மட்டுமல்லாது அவர்களது அறநெறிகள் அத்தனையும்கூட அதிர்வலைகள் எழுப்பவல்லது! அவைகள் அத்தனையும், அவர்கள்/ அவர்களுக்காக/ அவர்களாளேயே வகுத்துக் கொண்ட, சுயசாயலோடு இருக்கும்! இந்த வகை மனிதர்களை, திரையில் வியூசுவலாக்குவதென்பதும் கடினம். 'பசி' / 'ஈ' ஆகிய இரண்டு படங்களில் அந்த மக்களை காமிக்க கொஞ்சம்போல் முனைந்திருந்தார்கள். அதில் 'பசி' நடகத்தனமானது என்றால்.... 'ஈ' மிக நெருக்கத்திலான வியக்க வைத்த முயற்சி!
*
அவரது கதைகளில்/ நாவல்களில் வரும் மேட்டுக்குடி மக்கள் எப்பவும் சுய தர்க்கப் பேர்வழிகள்! வழிவழியாக தொடரும் கலாச் சாரக் கட்டுக்களை தர்க்கத்தின் வழியே தகர்ப்பதில் அவர்கள் தங்களை நிறுவிக் கொள்வார்கள். அல்லது, பெரிய சுயதர்க்கத்திற் குப் பிறகு, இன்னும் அதிகமாக பழமைகளை பூஜிப்பவர்களாகவும் பரிமாணம் கொள்வார்கள். பொதுவில், பழமைகளை தகர்ப்பவர்களே அவரது கதை மாந்தர்கள் என்று கொள்ளலாம்.
*
எழுத்தினூடே அவர் தன்னை வாசகனிடம் காமித்துக்கொள்ள யத்தனிக்கும் தோறும், வாசகனைத் துணுக்குறவைக்கும் அதிர்வலை களை எழுப்பக் கூடியவராகவே இருப்பார்! இந்த பிரயத்தனம் அவரது கதைகள், நாவல்களைக் காட்டிலும் கட்டுரைகளில் பிரமா தப்படும். "மாணவர்களே மாடு மேய்க்கப் போங்கள்!" "பெண்களே திருமணம் செய்துக் கொள்ளாதீர்கள்!" "சமஸ்கிருதம் தான் உன்னதமொழி!" "நீங்கள் முன்னே பிறந்து விட்ட ஒரே காரணத்திற்காக பின்னே பிறக்க இருப்பவர்களை வேண்டாம் என்று சொல்ல உங்களுக்கெ ன்ன நியாயம் இருக்கிறது!"(கர்ப்பத்தடைப் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பாக அவர்) "பிராமணர்கள் தீண்டாமையை கடைப் பிடிப்பவர்களாக இருந்தால் இருந்து விட்டுப் போகட்டும், நீங்களும் அவர்களை அதே தீண்டாமையைக் கொண்டு பாருங்கள்!" ('ஜெய ஜெய சங்கர' நாவலில் ஓரிடம்) இப்படி, அதிர்வு தரும் பாங்கில் அவர் எழுதிய எழுத்துக்கள் அனேகம் உண்டு. அவரது மேடைப் பேச்சும் இதே ரகம்தான்! கூடவே, கணீரென்ற வையலும் சாடலும் இழை யோட மின்னும்.
*
அவரது துணிவு அன்றைக்கு எழுத்துலகிலும், அரசியல் மேடையிலும் பிரப லமானது. அந்த துணிவுக்குப் பின்னாலான வாழும் நிஜங்கள் எப்போதும் அவரை நொடிக்க விடாது. தடலடிக் கருத்துக்களும், சந்தர்ப்பத்திற்கேற்ப மாற்றிக் கொள்ளாத நேர்மையும் தான் ஜெயகாந்தன்! என்றாலும், சில நேரங்களில் அவர் தனது கருத்துகளை அபூர்வமாக மாற்றிக் கொண்டிருக் கிறார். இந்திராகாந்தி பிரதமராக பதவி வகித்தபோது இந்தியாவில் தீவிர எமர்ஜன்ஸியை பிரகடனப் படுத்தினார். அன்றைக்கு பெரும்பாலான எழுத்தாளர்கள் அதை எதிர்ப்பவர்களாகவே இருந்தார்கள். சுதந்திரத்தின் வழியே நமக்கு கிட்டிய பேச்சுரிமை, எழுத்துரிமை, வழக்காடும் உரிமை யெல்லாம் பறிப்போய்விட்டதாக புழுங்கினார்கள். ஆனால், ஜெயகாந்தன், எமர்ஜன்ஸியை வரவேற்றார். இந்திரா காந்தியை ஆதரித்தார். என் பின்தைய நாட்களில் அவரது எமர்ஜன்ஸி குறித்த கருத்துகளை, காலத்தின் கருத்தா கவும், அவரது அழகியல் முடிவுகளில் ஒன்றாகவும் அதை கணித்து உணர்ந் தேன்.
*
"கண்டதைப் பேசுவதற்கும், கண்டதையும் எழுதுவதற்கும் உங்களுக்கு எதற்கு சுதந்திரம்? அதை அருமருந்தாய் உபயோகிக்கத் தெரிந்தவனுக்குத்தான் அதுதேவை"என்பதாக அவர் தீர எழுதி, தன் சக பேச்சாளர்களையும், எழுத்தா ளர்களையும் சாடினதுதான் எத்தனை சரி! எதன் பொருட்டும் இன்றுவரை அவர் இந்தக் கருத்தை மாற்றிக் கொண்டவர் இல்லை!
*
சமீபத்தில், தனித் தமிழ்வாதிகளை எதிர்த்துப் பேசிய மேடையில், "தமிழ் என்போர் தன்னைத்தானே நக்கிக்கொள்ளும் நாய்கள்" என்றார்! இந்தப் பேச்சு மக்கள் மத்தியில் பெரிய சர்ச்சையை கிளப்பியது. என்ன நினைத்தாரோ தெரியவில்லை அப்படி பேசியதற்காக வெளிப்படையான மன்னிப்பும் கேட்டார்! எனக்குத் தெரிந்து அவர் மன்னிப்பென்று கேட்ட ஒரே நிகழ்வு இதுவாகத்தான் இருக்கும்.
*
கிட்டத்தட்ட இதே மாதிரி அவர் இறங்கி வந்த அல்லது பிசகிய ஓரிரு நிகழ்வும் உண்டு. கலைஞர் கருணாநிதியை அவர் விமர்சிக்காத விமர்சன ங்கள் இல்லை, அத்தனையும் அப்படியே அட்சரம் பிசகாது பதிவுகளில் 'இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்களாக இருக்கிறது. கலைஞர் தனது சொந்த அறக்கட்டளை சார்பாகத் தந்த பொற் கிழியை பெற்றுக்கொண்டு; கூடுதலாக மகனுக்கு' அரசு உத்தியோகமும் கேட்டுப் பெற்றவராக, கலை ஞரை காந்தியோடு ஒப்புமைப்படுத்தி புகழ்ந்த தாகத் தகவல்! அவர் அமெரிக்கா போய் வந்த நேரம், அந்த நாட்டை "நிஜ மான கம்யூனிஸ்ட் நாடு!"யென அவர் கணித்துக் கூறிய செய்தியைப் படித்ததும் அப்படிதான்! காஞ்சி சங்கராச்சாரி, ஓர் கொலை வழக்கில் முதல் குற்ற வாளியாக கைது செய்யப்பட்டபோது, அவருக்கு வக் காலத்து வக்கீல் மாதிரியான அனுசரனைப் பேச்சும்கூட அந்த ரகம்தான்!
*
ஜே.கே., சில ஆண்டுகளுக்கு முன் தமிழில் தேர்ந்தப் படைப்பாளியாக உரு வெடுத்த ஒருவரை தனது இலக்கிய வாரிசாக அறிவி த்தார். அந்தப் படைப் பாளியின் படைப்புகளைக் கண்டு அவர் மலைத்திருக்க வாய்ப்பில்லை. அவரே ஒரு இமயம்! ஆனால், அந் தப் படைப்பாளியின் அகம்; புறம் கணித் தவராகவும், அவரது எழுத்தின் அடிநாதம் புரிந்தவராகவும், இன்னும் அவரை சமன் செ ய்ய வேண்டியதின் அதி அவசியம் உணர்ந்தவராகவுமே, அவர் அப்படியொரு தீர்வை அறிவித்திருக்கக் கூடும் என்று கருதுகிறேன். அதை அவரது அழகியல் தீர்வுகளில் ஆக முக்கியமானதாக பார்த்தேன். ஜெ.கே.யின் மதி நுட்பத்தை திரும்பத் திரும்ப ரசித்தேன். இதற்காகவே அவர் மீதான சின்னச் சின்ன கசடுகளையும் கலைந்தேன்.
*
ஜெயகாந்தனை அடுத்து, வரிசையாக தமிழின் சிறந்தப் படைப்பாளிகளை யெல்லாம் வாசித்த நாளில் அவரிடம் காணாத ஏதேதோ இவர்களிடம் தட்டுப்பட உணர்ந்தேன். வாழ்வியல் நிஜங்கள் இவர்கள் எழுத்தில் அபரி மிதமான ஜாலவித்தை புரிவதுமாதிரி இருந் தது. மனித வாழ்வின் கோலங்கள் எண்ணற்ற சுழிகள் கொண்டது! ஜே.கே. வரையவிட்ட அதன் இன்னும் பல பரிமாணங்களை இவர்கள் பிரமாதப் படுத்தியிருந்ததை உள்வாங்கவும் சிலிர்த்தேன். இவர்களது மொழி, ஜெயகாந்தனது மாதிரியான நேரிடையானது அல்ல! எதையெதையோ சொல்லி எதையெதையோ சொல்லாமல் விடும் மொழி!
*
ஜே.கே.யைப் படித்தபோது அவரது வேகத்திற்கே ஓடியது மாதிரி இவர்களிடம் முடியவில்லை. ஆங்காங்கே இடறியது. சிலநேரம், அவர்களது வார்த்தைகள் மறித்து நிறுத்தியும் விடு கிறது.ஆழ்ந்த யோசிப்புக்குப் பிறகே தான் இங்கே அனுமதி!இவர்களின் பின்னலது சூட்சமம் அப்படி! அது பிடிப் படாதப்போதும், அதன் மீது ஆர்வ இழப்பு ஏற்படுவதில்லை. மாறாய் இன்னும் இன்னுமென்ற ஆர்வம் தொற்றிக்கொள்ளவே செய்தது. அதனால்தான் என்னவோ இன்றுவரை இந்தவகை எழுத்தின் மீதான பரபரப்பும் கவர்ச்சியும் கிளைத்துக் கொண்டே இருக்கிறது.
*
அன்றையக் காலக்கட்டத்தில் படித்த சில விமர்சனக் கட்டுரைகளில் ஜெய காந்தனின் பற்றிய உருவம் வேறுமாதிரியானது. கிறுக்கலான கோணத்தின் வினோதசித்திரம். அது, என்னில் தங்கிய ஜெயகாந்தன் அல்ல. அதன்பின் சிலஆண்டுகள் கழித்து வெளிவந்த 'ஜே.ஜே.சில குறிப்புகள்' என்கிற சு.ரா.வின் நாவலில் முல்லைக்கல் என்றொரு கதாப்பாத்திரம் பிரபல்யம். கொஞ்சம் கூடிய இலக்கியப் போலித்தனம் அவனது லெட்சனம். அந்த நாவல் குறித்து வந்த விமர்சனங்களில் ஜெயகாந்தன் பேசப்பட்டார். அந்த முல்லைகல்தான் ஜெயகாந்தன் என்றார்கள். சூதுவாது அறியாத அன்றைய மனம் அதை நம் பியது. என்றாலும், அந்த நம்பிகை நாள்பட நிலைக்கவில்லை. ஜெயகாந்தன் மீண்டும் என்னில், அவருக்குறிய இருப்பில் அமரவே செய்தார். ஆனால், அன்றைக்கு அவரை அவரது அலுவலகத்தில் வைத்து சந்திக்கச் சென்ற நாளில் முல்லைகல்லாக நம்பிய மனத்தோடுதான் போனேன்.
*
ஆழ்வார் பேட்டை ஒரு குடியிருப்பின் முகப்பில் சின்ன கன்னிக் கோவில். அதையொட்டி ஓர் பழைய கட்டிடத் தொகுப்பு. கட்டிட காம்பௌண்ட் வழியே உள்ளே போனேன். மிகவும் எளிமையாகத் தெரிந்த அந்தக் கட்டிடத்தின் முதல்மாடியில், ஓர் கதவிலக்கம் தான் ஜே.கே.யின் அலுவலகமாக இருக்க வேண்டும். அவர் குறிப்பிட்டிருந்த முகவரி அதுதான். மாலைப்பொழுது தாழ் ந்து, இரவின் கூறுகள் கவிழவும்,தெரு விளக்கெல்லாம் மினுக்கென பற்றிக் கொண்டிருந்தது. கட்டிடத் தொகுப்பை யெட்டி புறத்தே தெரிந்த கல்கட்டுமா னப் படிகளின் வழியே, முதல் மாடியின் கால்வைத்தத் திருப்பத்தில் அவரது அலுவலகம் இருந்தது.
*
ஜே.கே. முன்பே வந்திருந்தார். வாசகர்கள்; நண்பர்கள்; சகப் படைப்பாளிகள் என்று பத்துக்கும் குறையாதவர்கள் அங்கு குழுமி இருந்தனர். பத்துக்கு பதி னைந்து அறை அது. உள்சுவற்றில் ஓர் நிலைத் திறப்பு. ஒட்டு அறை மாதிரி. முன்பு இருந்தவர்கள் அதை சமையலுக்கான பிரத்தியோக புழங்கிடமாகப் பயன்படுத்திருக்கலாம். தலைவாசல் நிலையருகே ஒரு பழைய மேஜை, அதற் குப் பொருந்தும் ஒரு நாற்காலி. மேஜையின் வலதுகையில் ஒரு சின்ன இருக்கை. நாற்காலியில் ஜே.கே.! எதிரே தரையில் அவரது சகபாடிகள். அமரச்சொல்ல... வலதுகை இருக்கையில் நான்!
*
என்னோடு வந்த எனது பிராமண நண்பன் வெளிவராந்தாவிலேயே நின்று விட்டான். கதை கவிதை என்றாலே முகம் சுழிப்பவன். அதெல்லாம் உதவாக் கரைகளின் செயல்பாடுகள் என்பது அவனது தீர்மானமான முடிவு. இந்த சனியனையெல்லாம் விட்டொழி என்று பலமுறை சொல்லிவிட்டான். ஒருதரமாவது அவனது போச்சை கேட்டிருக்கலாம் என்று இன்றைக்குத் தோன்றுகிறது. இப்பொழுது ஜெயகாந்தனோடு குழுமியிருக்கும் இந்தக் கூட் டம் நிச்சயம் அவனை மிரட்டலாம். எல்லாவற்றையும் எனக்காக சகித்துக் கொள்ளும் மனம் கொண்டவன்தான் அவன்!
*
நான் ஜெயகாந்தனுக்காக வாங்கிவந்த வெளிநாட்டு சிகிரெட்பாக்கெட் சிலவற் றை அவரிடம் கொடுத்தேன். நன்றியோடு அதனைப் பெற்றுக் கொண்டு, மேஜை இழுப்பைத்திறந்து உள்ளே வைத்துச்சாற்றினார். வெளிநாட்டு சிகிரெட் பற்றியும், அந்தப் பாக்கெட்டைதிறந்து நுகரும் சுகந்தத்தைப் பற்றியும் அவர் எழுதிய கட்டுரையைப் படித்திருக்கிறேன் என்பது மட்டுமல்ல, அதை பழக்கத் தில்ஏற்றி, வழக்கப்படுத்திக் கொண்டவன். இந்த நினைவின் தொகுப்பாகத்தான், அவருக்கு இந்த சிகிரெட் தேர்வு. ஒரு பாக்கெட்டை மட்டும் எடுத்துத் திறந்து, அதில் ஒரு சிகிரெட்டை எடுத்துக்கொண்டவராக, பிற யாரிடமும் நீட்டாது; என்னிடம் மட்டும் நீட்டி னார். என் கை நீளத் துவங்கி, யோசனைக்குப்பின் இழுத்துக் கொள்ள, தவிர்த்தேன். இங்கே பத்துக்கு மேற்பட்ட சகாக்கள் வாளா விருக்கும் போது, ஜே.கே.யோடு நான் புகைப்பதென்பது சரியாகப் படவில்லை.
*
அவர் சிகிரெட்டை ரசித்துப் புகைத்தார். நான் அந்த ரூமை கண்களால் துழாவினேன். பக்கச் சுவரில், கூடுதலான நீள அகலத்தில் செல்ஃப் அடிக்கப்பட்டு, அதில் புதுமைப்பித்தன் படைப்புகள் முழுமையும் அடுக்கப் பட்டிருந்தது! அதே அளவில், எதிர்புற சுவற்றில் இன்னொரு செஃல்ப். அது பூராவிலும் ஜெயகாந்தன் படைப்புகள்! ஆனது, இப்பொழுது அவரைப்பார்க்கவும் "பேட்டி" என்றேன். "பேட்டி என்று தனியாக ஒன்று வேண்டாம், இங்கே நீங்கள் பார்ப்பவைகள், கேட்பவைகள் கொண்டு கட்டுரையாக எழுதிக் கொள்ளுங்கள். உங்களுக்கென்று கேள்விகள் இருக்குமென்றால், அதை நீங்கள் கேட்கலாம். நிகழும் சம்பாசனைகளின் இடையில் அதற்கு பதில் கிடைக்கும்" என்றார். அவர் மாற்றி அமைத்த இந்த திட்டத்தில் மிகுந்த சுதந்திரத்தை உணர்ந்தேன். கொஞ்ச நஞ்ச இறுக்கமும் இத்துவிட்டது. ஏக சந்தோசம்.
*
ஒட்டு ரூமிலிருந்து முதிர்ந்த பெரியவர் ஒருவர் வெளிப்பட்டார். வெளுத்த மெலிந்த தேகம். சட்டையில்லை. வேஷ்டி மட்டும்தான். அதைகூட மார்புக்கும் வயிற்றிற்கும் இடையில் தூக்கிச் சொறுகியிருந்தார். உடல் பூராவும் பட்டைப் படையாய் திருநீரு. நீண்டு அலையலையாக இறங்கிய வெண்தாடி. அடர்த்தியில்லை. அவரது கையில் ஒருமண்பானையும், காலி டம்ளர்களும் இருந்தது. அதி லிருந்து டம்ளரில் சாய்த்த பானத்தை முதலில் ஜெயகாந்தனுக்கென்று கொடுத்து விட்டு; தொடர்ந்து எதிரே அமர்ந்திருந்த நண்பர்கள் குழுமத்திற்கும் கொடுத்தார். அதன் நெடி காற்றில் தவழ்ந்து வந்தது. அது கள்ளா? அல்லது வேறு லாகிரியா? உறுதி செய்யத் தெரியவில்லை. அதையொட்டிய ஞானத்தின் போதமை எனக்கு எப்பவும் உண்டு. பெரியவர் என்னிடமும் ஒரு டம்ளரில் சாய்த்து நீட்டினார். ஜே.கே.யுடன் நண்பர்கள் அனுபவிக்கும் அந்த பேரனுபவம் எனக்கும் வேண்டித்தான் இருந்தது. அதுவும் அவருக்குச் சமமாக! பக்கத்தில்! தயாராகத்தான் இருந்தேன். வாழ்வில் இன்னொரு முறை கிட்டக்கூடிய பாக்கியமா அது! ஆனால், அந்தப் பெரியவரிடம் ஜே.கே. தலையசைத்து எனக்கு வேண்டாமென்றார். நிகழவிருந்த உன்னத தருணங்கள் பறிபோனது.
*
ஜே.கே.யின் அலுவலகக் கட்டிடத் தொகுப்பை ஒட்டி, கடைசியில் குடிசைகள் தொடங்கி நீள்கிறது. அந்த குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ஒருவன், நேற்று இரவு குடித்துவிட்டு தனது மனைவியை நையப்புடைதிருக்கிறான். அந்தக் கொடுத்து வைத்தவனின்(!)மகாத்மியத்தை புகாராக ஜே.கே.யிடம் சொல்ல வந்திருந்தாள் அவனது மனைவி. எழுதிய, பேசிய நேரம்போக இப்படியான பஞ்சாய த்துகளிலும் ஜே.கே. ஆர்வம் காட்டுவாரோ என்னவோ! அவளது கனவனை கூப்பிட்டனுப்ப ஆள்விட்டார். இரண்டாவது மூன்றா வது என்று டம்ளரில் பானம் வட்டச்சுற்று வந்தப்படி இருந்தது. பருகிய நண்பர்கள் இருகிய மௌனத்தில் அவரைப் பார்த்தப்படியே உட்கார்ந்திருந்தார்கள். ஓரிருவர் மட்டும் "ஜே.கே."யென சகஜமாக அழைத்து அவரிடம் ஓரிரு வார்த்தைகள் பேசினர்.அங்கே ஜே.கே.மட்டும்தான் தொடர்ந்தும் சப்தமாக பேசியப்படி இருந்தார். வெளியே நான் எட்டிப்பார்க்க, பால்கேனி நடையில் என் நண்பன் குறுக்கும் நெடுக்கும் நடைப் பயின்றுக் கொண்டு இருந்தான்.
*
அவளது கணவன் அலுவலக நிலைமறைவில் வந்துநின்றான். மறைவில் அவன் நின்றபோதும் என்னால் அவனை உட்கார்ந்த இட த்திலிருந்து பார்க்க முடிந்தது. ஏழ்மை தறித்த சகமனிதனாக இருந்தான். கூலி வேலை செய்பவ னாக இருக்கவேண்டும். முகத்தில் இலேசான பயம். மூன்றாவது டம்ளர் பானத்தை இப்பொழுது ஜே.கே. முடித்தார். அவனை இணக்கமாய் பெயர் சொல்லி அழைத் தார். அவரது அழைப்பின் கணீரில் சுரிதி தப்பியதாகப் பட்டது. மறைவிலிருந்து நிலையின் மையத்திற்கு நகர்ந்துநின்று எல்லோரு க்கும் முகம் காட்டினான்.
*
ஜே.கே. அவனிடம், குடிப்பது எவ்வளவு பெரிய தப்பு என்கிற ரீதியில் மட்டுமே போதனை செய்தார். மனைவியை அவன் அடித் ததைப் பற்றி எந்தப் பேச்சு மில்லை. ஜே.கே.யின் இந்த அளவுகோளை சரியென்ற கோணத்தில் வியந் தேன். அவன் ஜே.கே.யின் எந்த சொல்லுக்கும் மறுப்பு சொல்லாமல், தலை யை மட்டும் ஆட்டியப்படி, அத்தனையும் ஒப்புக்கொள்பவனாகவே நின்றான். அவனது மனைவியைப் பார்த்து இனி இப்படி நடக்காதுயென தைரியம் சொல்லி அனுப்பிவிட்டு, அவனிடம் "சரி போ" என்றார். இரு கைகளையும் குவித்து ஜே.கே.யை வணங்கியப்படி தயக்கமாக நகரத்தொடங்கினான். நகர்ந்தவனை நிற்கச் சொல்லி, பெரியவரிடம் ஜே.கே. கண் ஜாடைக் காட்டினார். அவனுக்கும் ஒரு டம்ளர் ஊற்றிக் கொடுக்கப்பட்டது. மறுப்பேதும் சொல்லாமல் அதை அவன் வாங்கி சுவர் மறைவில் முடித்து, டம்ளரையும் தந்துவிட்டு, மலர்ந்த முகமாய் தெளிவான கும்பிடைச் செலுத்தி விடைப் பெற்றான். அவன் அப்படி விடைப்பெறும் பாங்கைக் கண்டு அமர்ந்திருந்த நண்பர்களின் குழு கொல்லென சிரித்தது. ஜே.கே.யும் சிரித்தார். நான் ஆரம்பம் தொட்டே, அந்த நிகழ்ச்சியின் சிரித்த சாட்சியாகத்தான் இருந்தேன்.
*
ஜே.கே. இப்பொழுது என் பக்கம் திரும்பினார். சௌதியில் சிறிய திருட்டுக் குற்றங்களுக்கெல்லாம், விரல்களை தறித்து விடுவார் களாமே என்று கேட் டார். ஆமாம் என்றேன். சிறிய திருட்டுக்களில் சம்பந்தப்படுபவனை மனிதா பிமானக் கண்ணோட்டத்திலும், பொருளாதார ஏற்றத்தாழ்வு நிலைப்பாட்டிலும் பொருத்திக் கணிக்க வேண்டும் என்றார். அதை ஒப்புக்கொண்ட நான், அவர் கள் அவர்களது மத குற்றவியல் சரத்துப்படி தண்டனைகள் வழங்குகிறார்கள் என்றும், அந்தவகைத் தண்டனைகளால் பிற நாடுகளை விட அங்கே குற்றங் கள் குறைவாக இருக்கிறதென்றும் சொன்னேன். மேலும், இந்த வகையான தண்டனைகளை சௌதி அரேபியா தவிர்த்து பிற இஸ்லாமிய நாடுகளில் பெரும்பாலும் இல்லை என்றேன். சௌதிஅரேபியா மட்டும்தான் இன்னும் அப்படி முழுமையான சரியத்து சட்டத்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு இருக்கிறது என்றபோது அவரும் ஒப்புக் கொண்டார்.
*
ஒரு நாட்டின் ஆட்சியாளர்களுக்கு, தனது மதத்தை எங்கே வைக்கனுமோ அங்கே மட்டுமே வைக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்றவர், எங்கள் நாட்டிலும் மதம் இருக்கிறது! நான் போய் பார்த்த சமாதிகளில் எல்லாம் அதைப் பார்த்தேன்! என்றார். எங்கள் நாடு என்று அவர் சொன்னதை 'சோவியத் யூனியன்' என்றும், நான் போய் பார்த்த சமாதிகளில் எல்லாம் அதைப் பார்த்தேன் என்றதை 'அவர் போய் பார்த்த சமாதிகளில் மதத்தின் அடையாளமான சிலுவைகள் சொறுகப்பட்டிருந்த காட்சியையும்' அவர் குறிப் பிடுகிறார் என்று நான் அர்த்தப்படுத்திக் கொண்டேன். அவரது அழகு சொட்டும் இந்த வாக்கிய அமைப்பிலும்; அதன் 'சரி'யிலும் சொக்கினேன். ஜே.கே. என் றால் ஜே.கே.தான்! ஞானபீடப் பரிசு, அவருக்கு சும்மா கிடைத்து விடவில் லை!
*
பிற்காலத்தில், பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது மத ஆளுமைகளுக்கு எதிராக எழுந்த சமூக பகிஷ்கரிப்பையொட்டி ஜெயகாந்தன் செய்த பதிவு வழு வானது. குறிப்பிடத் தகுந்தது. மதங்கள் ஒரு கட்டுக்குள் இருக்கவேண்டுமென அன்றைக்கு அவர் பேசியதின் நேர்மையை அந்தத் தருணமே ஒப்புக் கொண் டேன். இடதுசாரி மனோபாவம் கொண்டவர்களுக்கெல்லாம் அன்றைய சோவியத் யூனியன் ஓர்செல்லம். அதை அவர், எங்கள் நாடென குறிப்பிட் டதை அப்படித்தான் யதார்த்தப் பொருள் கொண்டேன். நிஜமும் அதுதானே!
*
என்னுடைய 'தமிழ்ப்பூக்கள்' சிற்றிதழின் பிரதி ஒன்றை என்னிடமிருந்து பெற்று புரட்டினார். 'அரசியல் வாதிகளிடமிருந்து நாட்டை மீட்பது எப்படி?' என்கிற தலைப்பில் இருந்த கட்டுரையை கொஞ்ச நேரம் பார்வை செய்து விட்டு, 'அரசியல் வாதிகளிடமிருந்து அரசியலை மீட்பது எப்படி?' என்பதாக அந்த தலைப்பு இருந்திருக்க வேண்டுமென்றார். மெளனமாக இருந்த அவரது சகாக்கள் இப்பொழுது, "ஆமாம் அதுதான் சரி" என்றார்கள். ஜே.கே. மீண்டும் தொடர்ந்தார். பண்டிட்நேரு, ஜீவா, காமராஜ் எல்லாம் அரசி யல்வாதிகள்தான் என்றார். "ஜே.கே. பிரமாதம்" என்றோர் குரல் அந்தப் பக்கமிருந்து எழுந்தது. நானும் ஒப்புக் கொண்டேன்.
*
அடுத்து எங்களது பேச்சு, சினிமாவின் பக்கம் நகர்ந்தது. அவரது சிறுகதைகளி லிருந்தும், நாவல்களிலிருந்தும் சில காட்சிகள் உரு வப்பட்டு தமிழ்ச் சினிமா வல்லுனர்களால்(!) பயன்படுத்தப்படுவது குறித்து ஜே.கே.யிடம் கேட்டேன். தாராளமாக எடுத்துப் பயன் படுத்திக் கொள்ளட்டும். ஆட்சேபனை இல்லை என்றவர், அவர்கள் மீது நான் வழக்குத் தொடுத்தால், என் மீது சோவியத் எழுத்தாளர்கள் பலர் வழக்குத் தொடுப்பதும் நியாயம் என்றார்!
*
இத்தனை தாராள மனத்தோடும், நேர்மையோடும் தமிழ்ச் சினிமாக்காரர்களைப் பார்த்த ஜே.கே., டைரக்டர் பாலசந்தரை கண்டமேனிக்கு திட்டத் தொடங் கினார். அவரது முகத்தில் ஆவேச கோடுகள் நெளிய, கர்ஜனைக் குரலும் கரகரத்தது. அவரை சாந்தப்படுத்த யாரும் முன்வராத நிலையில், இன்னும் இன்னுமென்று ஏகத்திற்குத் தீட்டித்தீர்த்தார். பாலச்சந்தரை, அவர் சார்ந்த மதத்தின் பெயர் சுட்டி கோபப்பட்டபோது, இந்த ஜெயகாந்தன்தானா 'ஜெய ஜெய சங்கரா' எழுதினார் யென சந்தேகமே வந்துவிட்டது. மீண்டும் என்பார் வை வெளியே துழாவியபோது, பால்கெனியில் உலாத்தும் என் நண்பன் தலையில் அடித்துக்கொண்டு;என்னை உடனே எழுந்துவரச் சொல்வதும் தெரிந்தது.
*
பாலச்சந்தர் இயக்கி, மகத்தான வெற்றிப் பெற்ற 'அவள் ஒரு தொடர் கதை' யில் இரண்டு கதாநாயகிகள். அதில் ஒருத்தி ஆங்கில நாவல்கள் படிக்கும் வழக்கம் கொண்டவள். மற்றொருத்தி ஜெயகாந்தனின் நாவல்கள் படிக்கிற ரகம். ஆங்கிலம் படிக்கிற நாயகி, தனது வாழ்வின் பிரச்சனைகளில் மிகத் துல்லியமாக முடிவெடுக்கிறவள். ஜெயகாந்தனை படிக்கும் நாயகியோ, வாழ்வை சாதாரண மாக எடுத்துக் கொள்பவளாகவும், விதண்டாவாதம் புரிப வளாகவும், எல்லாவற்றிற்கும் ஒரு நியாயம் கற்பிப்பவளாகவும் தலையெ டுத்து தோல்விக் கண்ட பெண்ணாக முடிகிறாள். இது பாலச்சந்தருக்கு வேண்டாத வேலை. அந்தப் படம் வந்த நாளிலேயே இது குறித்த ஜே.கே.யின் கோபம் பத்திரிகைகளில் பேசப்பட்டது. ஜெயகாந்தனைப் படித்தப் பெண்கள் இப்படி சீர் கெடுவார்கள் என்பதற்கும், ஆங்கில நாவல்களைப் படிக்கும் பெண்கள் வாழ்வை சிலாக்கியமாக்கிக் கொள்ளுபவர்கள் என்பதற்கும் என்ன இருக்கிறது உத்திரவாதம்?
*
எப்பவோ வந்த அந்தத் திரைப்படம் குறித்த பாலச்சந்தரின் மீதானக் கோபம், ஜே.கே.யிடம் இன்னும் தணியாதிருப்பது வியப்பாக இருந்தது. பேச்சு தொடர் ந்து இயக்குனர் பி.ஆர்.பாந்துலுவைப் பார்க்க நகர்ந்தது. சினிமாவைப்பற்றி அவனுக்கு என்னத்தெரியும் / சில நேரங்களில் சில மனிதர்கள் எனது 'டிரிட் மெண்ட்'படி இயக்கப்பட்ட படம் / இப்படி அவரதுப் பேச்சு நீண்டு கொண்டே இருந்தது. இரவு ஒன்பதைத் தாண்ட, பருகியப் பானம் அவரை முன்னேற்றப் பாதையில் இட்டுச்செல்ல, சபை இப்பொழுது சலசலத்தது. ஒருவர் பின் ஒருவராக விடைப்பெறத் தொடங்கினார்கள். நானும் எழுந்தேன். ஜே.கே.யும் எழுந்தார். அவர் கீழே இறங்கி, காம்பௌண்டை தாண்டியவுடன், நெருக்கத்தில் அவரிடம் நன்றியையும் வணக்கத்தையும் சொல்லி விட்டுப் புறப்பட கருதி னேன். மாடிப்படியில் அவரை முன்னே இறங்கவிட்டு நான் பின் தொடர்ந் தேன்.
*
தடலடியானப் பேச்சும் சிரிப்புமாக கீழே இறங்கி காம் பௌண்டை தாண்டிய அவர், கட்டிடச் சுவற்றிற்கும், சுவற்றையொட்டி இருந்த கன்னிக் கோவிலின் பின்புறத்திற்கும் இடையே தெரிந்த கழிவு நீர் பாதையின் அருகே போய், பேண்ட் ஜிப்பைத் திறந்து, எல்லோரிடமும் பேசி சிரித்தப்படி, நின்றப் பாட்டிற்கு சிறு நீர் கழித்தார்.
*
ஒரு சின்னப் பையன், சிறிதுமில்லாத பெரிதுமில்லாத சைக்கிளை கொண்டு வந்து ஜே.கே.அருகில் நிறுத்தினான். பின் இருக்கையில் இரண்டு பக்கமும் கால்களைத் தொங்கப்போட்ட நிலையில் ஏறி அமர்ந்தார். நான் அருகில் போய் நன்றி கூறி விடைப்பெற்றேன். அமர்க்களமாக சிரித்தப்படியே விடைத் தந்தார். அந்தச் சிறுவன் சைக்கிளை மிதிக்கத் துவங்க வேகம்பிடித்தது. ஜே.கே. தலையைத் திருப்பி எல்லோருக்கும் 'டாட்டா' காண்பித்துப்படி, பெரிய சப்தம் கொடுத்தவராக இருளில் போய் மறைந்தார்.
*
என் நண்பன் பஸ்ஸை எதிர் நேக்கியவனாக தூரத் தெரிந்த ரோட்டின் வளைவில் போய் நின்றான். டி.நகர் போகவேண்டும். நான்அவனிடம் போய் சேர்ந்தபோது, "இந்த மாதிரி இடத்திற்கெல்லாம் இனி என்னை அழைக்காதே, நீயும் போகாதே" என்று அதட்டி னான். அவனது கோபம் இன்னும் அதிகமாக இருக்கும் என்று நினைத்திருந்தேன். அப்படியெல்லாம் இல்லை. முகத்தை மட்டும் தொடர்ந்து இறுக்கமாகவே வைத்துக் கொண்டு வந்தான். ஜே.கே.யை அறிந்தவர்களால்தான் அவரைப் புரிந்துக் கொள்ள முடியும். ஜே.கே.யை இவன் என்றைக்கு அறிவது! நான் என்றைக்குப் புரியவைப்பது! டி.நகர் போகிறவரை, "ஸாரி விசு..." "ஸாரிய்யா.." சுலோகத்தை அப்பப்ப சொல்லி குழையடித்துக் கொண்டே போனேன். பாவம் அவன்! ஜெயகாந்தனின் உலகைக் கண்டு அநியாயத்திற்கு பயந்து விட்டான்.
*
*******************

Wednesday, July 18, 2007

காமராஜ் - 105


நான் கொஞ்சம் போசிவிடுகிறேன்.
--------------------------------------------
- தாஜ்


காமராஜின் இந்த 105 வது பிறந்த தின நாளில் அவரது நினைவாக கொஞ்ச நேரம் இப்படி நான் செலவழிப்பதில் மனது பூராவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனது உள்ளமெல்லாம் நிறைந்த அந்த தலைவன் குறித்து என் பங்கிற்கு எழுத, உயிரோட்டமான செய்திகள் ஒருபாடு உண்டு.

என் வாழ்வின் ஒரு காலக்கட்டம் பூராவும் என் நினைவுகளும், செயல்பாடுக ளும் அவரைச் சுற்றியே இருந்தது. இன்றைக்கும் சட்டென்று அவரது ஞாபகம் எழுந்து அந்த நினைவுகளில் முழ்கிப் போவதும் உண்டு. அதனால்தானோ என்னவோ என்னுடைய கட்டுரைகள் பலவற்றில் அவரை குறிப்பிட்டப்படியே இருக்கிறேன். மேற்கோளாகவோ, உயர்ந்த மதிப்பீட்டிற்காகவோ, தன்னிகரற்ற தனித்துவத்திற்காகவோ அவரை மீண்டும் மீண்டும் என் கட்டுரைகளுக்குள் கொண்டு வந்தப் படியே இருக்கிறேன்.


ஆனால் எனக்குத் தெரியும், மேற்கோள்களுக்கு அவரை எடுத்தாளுவதால் என்னுடைய மதிப்பு அங்கே உயர்கிறதே அல்லாமல் அவருக்கு நான் கீர்த்தி சேர்த்துவிடவில்லையென்று . தனது தியாகத்தாலும், சமூகப் பணியாலும், அரசியல் நாகரீகத்தாலும் இமயத்தை ஒத்த அழியாதப் புகழை கொண்டவர் அவர்.


தெரிந்தோ தெரியாமலோ என்னுடைய இளம் பருவத்திலேயே பெரியாரின் நிழல் பார்க்க ஒதுங்கியவன் நான். பெரியார் சுட்டித்தான் காமராஜை பார்க்கத் துவங்கினேன். நான் காமராஜை பார்க்கத் தொடங்கிய காலக்கட்டம் என்பது அரசியலில் அவர் தோற்று, அதன் வீழ்ச்சியை அவர் கண்டுக் கொண்டிருந்த நேரம். உயர் நிலைப் பள்ளி மாணவ பருவம் எனக்கு. அவரை உன்னிப்பாக பார்த்துக் கொண்டு இருந்தேனே தவிர, அரசியல் நிகழ்வுகளுக்கெல்லாம் விளக்கம் புரியாது. அந்தக் காலக்கட்டத்தில்தான் பெரியார் காமராஜை விட்டு திராவிட இயக்கத்தை ஆதரிக்கத் துவங்கினார். அந்தக் குழப்பமான அரசியல் நடவடிக்கையின் தெளிவு கிடைக்கக் கூட எனக்குப் பல ஆண்டுகள் பிடித்தது.

காமராஜ் மீண்டும் தனது அடுத்த தேர்தல் தோல்வியை தழுவினார். அரசிய லின் நகர்வுகள் எனக்கு பிடிப்பட்ட காலம் அது. அவரது
அந்தத் தோல்வியி லும் அவர் மீது மதிப்பே கூடியது. மேலும் அளவுக்கு அதிகமான பிரியமும் அன்பும்தான் கசிந்தது. அவரது தோல்வியை அவரது தோல்வியாகவோ /அவர் தலைமையேற்ற கட்சியின் தோல்வியாகவோ நான் பார்க்கவில்லை. சொந்த தாத்தாவுக்கு நேர்ந்த கைசேதமாகவும் இழப்பாகவும் பார்த்தேன். நல்லவர் களை இந்த சமூகம் இப்படித்தான் தண்டிக்கும் என்கிற முதல் அரசியல் பாடத்தை அப்பொழுதுதான் படித்தேன். நிஜமாகவே அதுதான் என் முதல் அரசியல் பாடம்.

காமராஜைப் பற்றிய ஆதர்சமான செய்திகள் கொண்ட கட்டுரை வடிவம் ஒன்று மனதில் உண்டு. அத்தனை பெரிய மனிதர் ஒரு சாதாரண கல்லூரி மாணவனான என்னோடு எளிமையாகப் பழகியது, நான் அவரோடு தர்க்கம் புரியும் அளவுக்கு எனக்கு அவர் சுதந்திரம் தந்தது, அவரது உடல் நலம் குன்றிய நாளிலும் என்னை நினைவு கொண்டு அழைத்துப் பேசியது.. என்று அத்தனை நினைவுக ளும் மெய்சிலிர்க்க வைப்பது. அத்தனையும் எழுதனும் என்கிற எண்ணமிருக்கிறது. எழுதுவேன்.

இங்கே, காமராஜை 'யதார்த்த வாதியான ஒரு கர்ம வீரர்' என்கிறத் தலைப்பில் மதிப்பிற்குறிய சுந்தர ராமசாமி அவர்கள் எழுதியகட்டுரையை இணைக்கி றேன். அவர் நினைவில் மீண்டும் மீண்டும் அண்டுவதில்தான் எத்தனை நிம்மதி!

*********


யதார்த்தவாதியான ஒரு கர்ம வீரர்!
---------------------------------------------

- சுந்தர ராமசாமி


இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்னால் என் இளம் பருவத்தில் மற்ற பள்ளித்தோழர்களுடன் சேர்ந்து, ‘காமராஜ நாடாருக்கு ஜே!’ என்று நானும் கத்தியது நன்றாக நினைவிருக்கிறது. அந்தக் காலத்தில் அவர் அப்படித்தான் அழைக்கப்பட்டு வந்தார். அப்போது அவருடைய பெயரில் எந்த மாற்றமும் செய்ய வேண்டுமென்ற எண்ணம் எவருக்கும் இருக்கவில்லை. அவருடைய ஜாதி வால் அவரது ஜாதி புத்தியைக் காட்டுவதாக எவருமே எடுத்துக் கொண் டது இல்லை. அவரது புகழ் தன்னிறைவு பெற ஒரு பட்டத்தை அவருக்கு அளிக்க வேண்டுமென்ற எண்ணமும் எவர் மனத்திலும் தோன்றியது இல் லை. தமிழ்ச் சமூகத்தில் அன்று அவர் பெற்றிருந்த கெளரவமும் எல்லோ ருக்கும் நிறைவாகவே இருந்தது. இவற்றின் பொருள் சமூகச் சேவை புரிகிற வனின் நம்பிக்கையும், அந்த நம்பிக்கை சார்ந்த செயல்பாடும்தான் முக்கியம் என்று அன்றைய மக்கள் நம்பினார்கள் என்பதுதான். மெய்யான நம்பிக்கைகள் அல்ல, போட விரும்பும் வேஜங்கள் சார்ந்த அடையாளங்கள்தான் முக்கியம் என்று மக்களை நம்பவைக்கும் கீழ்நிலைப் பிரசாரம் அப்போது அரசியல் நாக ரிகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கவில்லை. காமராஜரைப் போன்ற லட்சிய வாதிகளும் கர்மவீரர்களும் அரசியல் களத்தின் சூழலைத் தீர்மானித்து வந்த காலம் அது. சொல்லுக்கும் செயலுக்குமான உறவின் ஜீவப்பிணைப்பு முற்
றாக உலர்ந்துபோயிராத காலம்.

தேர்தல் களத்தில் மித மிஞ்சிய வாக்களிப்புகள், உண்மையைவிட அலங்காரப் பேச்சுக்கு அரசியல் களத்தில் முக்கியத்துவம், பண்டைத் தமிழ் வாழ்க்கையின் பெருமைகளை எவ்விதச் சரித்திர ஆதாரமும் இல்லாமல் மிகைப்படுத்தி மக்களின் உணர்ச்சியைக் கிளறிவிடுதல் போன்ற தந்திரங்கள்தாம் தேர்தல் வெற்றியைத் தீர்மானிப்பவை என்ற சூத்திரம் பெரியாரைவிட்டுப் பிரிந்து வந்த திராவிட அரசியல்வாதிகளால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. இந்தத் தந்திரங்களினால் பெற்ற பதவிகள், அதிகாரங்கள், ஊழல்கள் ஆகியவற்றின் பெரும் அறுவடைகள் காலப்போக்கில் தமிழ்ச் சமூகத்தில் எண்ணற்ற விஜவேர்களைப் பரப்பி வருகிறது.


காமராஜரின் வீழ்ச்சி நவீனத் தமிழ் அரசியலில் நிகழ்ந்த மிகக் கொடுமையான சம்பவம் ஆகும். லட்சியவாதத்தை நடைமுறைத் தந்திரம் முறியடித்த துன்பி யல் நாடகம் அது. அரசியலில் காமராஜர் ஒரு புனிதர் அல்லர். அரசியல் கள த்தில் புனிதர்கள் எவருமே நிலைக்கவும் முடியாது. ஒரு வெகுளியாக அவர் இருந்திருந்தால் இந்திய அரசியலில் அவரால் தலைமைப் பதவிக்கு ஒரு நாளும் வந்திருக்க முடியாது. உயர்குடிப் பெருமை கொண்டவர்கள், உயர் ஜாதியினர், மெத்தப் படித்தவர்கள், ஆங்கில விற்பன்னர்கள் போன்றவர்களே அரசியல் தலைமைக்கு வரச் சாத்தியமாக இருந்த காலம் அது. காமராஜர் ஒரு கீழ்நிலைத் தொண்டனாக அரசியலில் புகுந்த காலத்தில் கடைசி வரை யிலும் ஒரு தொண்டனாக இருந்து கழிவதே தன் விதி என எண்ணியிருந் தால் அதைச் சரியான யதார்த்தப் பார்வை என்றுதான் எவரும் எடை போட்டி ருக்க முடியும்.

காமராஜருக்கு முறையான கல்வி இல்லை. சென்னைக் காமராஜர் மன்றத் தில் கையெழுத்து மாதிரிக்காக வைத்திருக்கும் அவரது தமிழ்க் கடிதத்தில் மோசமான எழுத்துப் பிழைகள் உள்ளன. அவர், தாழ்ந்த ஜாதியாகக் கருதப்பட்ட மிகக் கேவலமாக ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்தவர். இளமையில் குறைந்த வருமானத்திற்குக் கடுமையான உடலுழைப்பில் ஈடுபடவேண்டிய கட்டாயத் திற்கு உட்பட்டவர். அவரது தோற்றம் காரணமாகவே பெரிதும் உயர் ஜாதி யினரின் தலைமைகொண்ட ஒரு கட்சியில் மிகுந்த புறக்கணிப்புக்கும் அவமா னத்திற்கும் அவர் ஆட்பட்டிருக்கக்கூடும். இந்திய விடுதலை எனும் சுடர் தளர் ச்சியின்றி எரிந்த இதயத்தால் மட்டுமே தாங்கிக்கொள்ளக்கூடிய புறக்கணிப் பை அவர் தொடர்ந்து எதிர்கொண்டிருக்கக்கூடும் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை.


மக்கள் மீது அளவிற்கு அதிகமான நம்பிக்கை கொண்டிருந்தவர் அவர். யதார்த்தவாதியான அவருடைய இந்த நம்பிக்கை, அவரது பார்வையில் இருந்த ஒரு முரண்பாடு என்றுகூடச் சொல்லலாம். மக்களுக்கு நல்லது செய்தால் அவர்கள் அதைச் சரிவரப் புரிந்துகொள்வார்கள் என்றும் அதை நினைவில்கொண்டு அக்கட்சியை ஆதரிப்பார்கள் என்றும், செய்த நல்ல காரியங்களை வெளிச்சம் போட்டு விளம்பரப்படுத்த வேண்டியதில்லை என்றும் அவர் நம்பினார். மக்களின் பிரித்தறியும் திறனிலும் உள்வாங்கிக் கொள்ளும் சக்தியிலும் இன்றைய அரசியல் வாதியிடம் காணக்கிடைக்காத நம்பிக்கை அவரிடம் இருந்தது.


சகலகட்சிகளும் மக்களைப் பொது மேடைகளில் பொய்யாகத் தூக்கிப் பேசுவதை நீண்ட காலமாகவே கேட்டு வருகிறோம். மக்கள் மீது கொண்ட உள்ளார்ந்த நம்பிக்கையைத்தான் அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள் என்று இன்றைய அரசியலின் அரிச்சுவடியை அறிந்தவர்கள் கூட நம்பமாட்டார்கள். காமராஜர் உண்மையாகவே மக்கள் மீது நம்பிக்கை வைத்திருந்ததால் அவர்களைத் தூக்கிப் பேச வேண்டிய அவசியம் அவருக்கு இல்லாமல் போயிற்று. திராவிட முன்னேற்றக் கழகத்தினரின் அரசியல் சாமர்த்தியங் களோடு காமராஜரின் அரசியல் அணுகுமுறையில் இருந்த நேர்மையை இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் ஒப்பிட்டுப் பாக்கலாம்.

காமராஜரை ஒரு காங்கிரஸ்காரர் என்று மட்டும் சொல்லி முடித்துவிட முடியாது. காங்கிரஸ்காரர்களின் பொதுக்குணம் என்பது அவரது ஆதார சுருதி என்றாலும் அந்தப் பொதுக் குணத்தில் அழுத்தம் பெறாத பல கூறுகளும் அவரிடம் வலிமையாக இருந்தன. அந்தக் கூறுகளை ஓரளவு காந்தீய ஆளுமையுடன் இணைத்துப் பார்க்க முடியும். ஆனால் காந்தீயத் தத்துவங் களில் அழுந்தும் தன்மையில்லாத குணமொன்றும் அவரிடம் இருந்தது. உதாரணமாக மதச்சிந்தனைகளில் கவனம் கொள்ளாத, கடவுள் வழிபாட்டில் அக்கறை காட்டாத வேற்றுமை முக்கியமானது. சோஜலிசச் சிந்தனைதான் அவருடைய அடிப்படைப் பார்வையாக இருந்தது என்றும் கூறலாம். பிறப்பு வளர்ப்பில் பெற்ற, இயற்கை அறிவு வழியாகக் கற்றுக்கொண்ட அனுபவச் சாரத்தினால், பிரச்னைகளின் ஜீவத்துடிப்பைத் தத்துவத்தளத்திற்கு ஏற்றிச் சிக்கல்படுத்தாமல், ‘ஊனக்கண்’ கொண்டு பார்த்தே புரிந்துகொள்ளவும் தீர்வு காணவும் அவரால் முடிந்திருந்தது


அவர் ஆட்சியில் அமர நேர்ந்தபோது ஒரு சில பிரச்சினைகளில் அவரது கவனம் தொய்வு காட்டாமல் வலுவாக இருந்தது. மின்சாரத்தின் பயன்களைக் குக்கிராமங்களிலுள்ள மக்கள்வரைப் பெற வழிவகை செய்தல், கல்வியைச் சகல கிராம மக்களுக்கும் ஊட்டுதல், வயிற்றுக்கு உணவில்லை என்ற காரணத்தால் ஏழைக் குழந்தைகளின் கல்வி தடைபடும் அவலத்தை அவர்க ளுக்கு இலவச உணவளித்துத் தடுத்தல், பயிர்கள் செழுமைப்பட்டு விளைச்சல் அதிகரிக்க வழிவகை செய்தல் போன்றவையாகும் அவை. இந்த அடிப்படைப் பிரச்னைகளுக்கு ஓரளவு தீர்வு கண்டிருந்தாலே கலாச்சாரப் பிரச்னைகள் உள்ளிட்ட பல பொருளாதாரத் தாழ்வுகளுக்கு விடைகாண மக்களின் வலு வான ஆதரவைப் பெற்றிருக்க முடியும். அவர்கள் ஆதரவுடன் பல நல்ல காரியங்களை நிறைவேற்றிருக்கவும் முடியும்.


ராஜாஜி கோஜ்டியினரின் குறுக்கீடினால் பதவியில் அமரவே காமராஜருக்கு வெகுகாலம் பிந்திவிட்டது. பெரியார் அவரது அரசியல் பார்வைக்கேற்பக் காமராஜரை ஆதரித்தது புரிந்துகொள்ளக்கூடியது. அதே நேரத்தில் ராஜாஜியின் ஆதரவைப் பெறுவதற்காகத் தி.மு.கழகம் அவருக்கு உயிரூட்டிக் காமராஜரின் கைகளைப் பலவீனப்படுத்திற்று. அரசியல் களத்தில் எந்தக் கட்சியினர் ராஜா ஜியை மிகக்கடுமையாக விமர்சித்தனரோ அவர்களே பிற்போக்குவாதியான அவரைத் தேர்தலில் பிராமணர்களின் வாக்கைப் பெறுவதற்காக ஆதரித்தனர். தன்னலமற்ற ஒரு சோஜலிஸச் சிந்தனையாளரான காமராஜை அரசியலில் இருந்தே ஒழித்துக்கட்ட திட்டங்கள் தீட்டினார்கள். ஒரு ஜாதித் தலைவராகத் தேய்ந்துபோயிருந்த ராஜாஜியை எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் தூக் கிப்போட்டுக்கொள்ளலாம் என்பதையும், காமராஜரின் தோல்வியை நிகழ்த்தாத வரையிலும் தம் கட்சியின் ஆட்சியை உறுதிப்படுத்த முடியாது என்பதையும் தி.மு.கழகத்தினர் அறிந்திருந்தார்கள்.


தேர்தலில் காமராஜரை விழத்தட்டுவது அவ்வளவு சுலபமாக இருக்கவில் லை. அன்று தி.மு.கழகத்தினர் காமராஜருக்கு எதிராகத் தேர்தல் மேடைகளில் செய்த பொய்ப் பிரச்சாரங்கள் தமிழக அரசியலில் கேவலமான தந்திரங்களை வெற்றிக்கான வழிமுறை ஆக்கிற்று. காமராஜரின் தோல்வி தமிழ்ப் பண்பாட் டைத் தூக்கிப் பிடித்துக்கொண்டிருந்த தி.மு.கவினருக்கு அவர்களை அம்ப லப்படுத்திய பெரும் தோல்வியாகும்.


தேர்தல் என்பது ஜாதிக் கணக்குகளை அடிப்படையாகக் கொள்ளவேண்டிய ஒரு சூதாட்டமாக இந்தியா சுதந்திரம் பெற்ற நாட்களிலிருந்து உருவாகி வருகிறது. இந்தியாவின் முன்னேற்றத்திற்கு மிகப் பெரிய தடையாக அமைந் தது தங்கள் வெற்றியை மட்டுமே முன்னிறுத்தி அரசியல் கட்சியினர் ஜாதி வேறுபாட்டைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டதன் மூலம் அதன் இருப் பை உறுதிப்படுத்தியதாகும். இந்த இழிவான சூத்திரத்தைக் காமராஜரும் ஏற் றுக்கொள்ளும் நிர்ப்பந்தம் நேர்ந்தது மிகப் பெரிய கொடுமையாகும்.


காமராஜரைப் போன்ற தலைவரொருவர் தேர்தல் களத்தில் தோல்வி கண் டால் மக்களை அணுகி மீண்டும் தன் கட்சியின் இடத்தை உறுதிப்படுத்திக் கொள்ளும் காரியத்தையே செய்திருக்க வேண்டும். அதற்கு மாறாகத் தன் ஜாதியினரின் வாக்கை நம்பி அவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் நின்று தேர்தலில் வெற்றி பெற்றதே உண்மையில் அவர் தன் அரசியல் தோல்வி
யை ஒப்புக் கொண்டதாகும்.

பட்டம் பெறாதவர்களும் ஆங்கிலம் அறியாதவர்களும் உயர் ஜாதியில் பிறக் காதவர்களும் ஆட்சிக்கு வந்தால் அரசு நிலை குலைந்துபோய்விடும் எனப் பழமைவாதிகள் வெளிப்படுத்தி வந்த அச்சத்தை இந்திய அளவிலும், குறிப்பா கத் தமிழகத்திலும் உடைத்தெறிந்தவர் காமராஜர். தங்கள் சாதாரணப் பின்ன ணியை எண்ணி, வெட்கி, கூசிக் குறுகி, தாழ்வு மனப்பான்மையால் பதவியில் ஏறத் தைரியம் இன்றித் தவித்துக்கொண்டிருந்த பலருக்கும் நம்பிக்கை அளித் தவர் அவர். இந்திய ஜனநாயகத்தில் சாதாரண மனிதனுக்குரிய பங்கை உறு திப்படுத்தியவர் அவர்.

****************

Thursday, July 12, 2007

கவிஞர் மாலதியின் "மாதவி" அரங்கேற்றம் - அறிவிப்பு


மறைந்த கவிஞர் மாலதியின் மொழிபெயர்ப்பு நாடகம்!

"மாதவி"

அரங்கேற்ற......
அறிவிப்பு







Tuesday, July 10, 2007

தாஜ் கவிதைகள் - 21




அன்புடன்.....
----------------

- தாஜ்..


உயிர்...
தறித்தவர்களுக்கெல்லாம்
சுவாசமட்டுமல்ல
தேவைகளின் தொடர் நீளம்.
இன்றைய கணக்கில்
நித்தம் உயிர் பேணும்
உன் கடிதமும் இல்லை.


நாம் அறியா நொடிகளில்
கூறுகளின் வழியே
பொசுக்கும் உஷ்ணம்
இருத்தலுக்கோர் சோதனை.
காலமும்
கால்பட்ட நிலமும் அப்படி!


கொண்ட சூட்டிற்கு
களிம்பிட்டுக் கொள்ளும்
விசனத்தில்
தவறவிட்ட நட்சத்திரச்
சங்கதிகள் ஏராளாம்.
உன்னில்... எனக்கான
கடிதங்களையும் சேர்த்து.


என் யூகங்கள்
பொய்க்குமெனில் உன்
பொதுப்பார்வைக்கு நான்
நகர்த்தப் பட்டிருக்கக்கூடும்
உடைந்த சிற்பமாய்
வற்றிய நதியாய்
காய்ந்த மரமாய்
அல்லது....
இன்னொருவன் என்கிற
ஸ்தானம்!


தவிர,
கடிதமெழுதும் மொழி
உனக்கு மறந்துவிட்டதென
நினைக்கவும்
சாத்தியமேது?

**********
satajdeen@gmail.com

Saturday, July 07, 2007

தாஜ் கவிதைகள் - 20



மதங்களின் குரல்கள்!

- தாஜ்..

*********

பாசிக்கிணற்றுத்

தவளைகளின்

பாதாளக் குரலை

ஒன்றுமில்லை என்றாக்கும்

குட்டைத் தவளைகளின்

சகதி சப்தம்.

கும்பிக் குளத்துத்

தவளைகள்

கெக்கலிக்கத் துவங்க

விண்ணை முட்டும்

ஏனைய சப்தமும்.

ஊர் அடங்கும்

நிசப்த வெளியில்

சமதளவாசிகளை நித்தம்

காதடைக்க வைப்பதே

இந்தத் தவளைகளின்

பிழைப்பாய் போனது.

******

satajdeen@gmail.com

Tuesday, July 03, 2007

தமிழக அரசியல் - இன்று! / தாஜ்..





தமிழக அரசியல் - இன்று!
-------------------------------------

- தாஜ்



தமிழக அரசியல், மற்ற மாநிலங்களின் அரசியல் மாதிரியானது அல்ல! ஆட்சி யை தங்க வைத்துக் கொள்ள, குடும்ப அரசியலை ஸ்திரப்படுத்த, கட்சிக்கான நிதியினைக் குவிக்க, சொந்த பந்தங்களின் சம்பாத்திய ராஜியத்தை விரிவு செய்ய, மக்கள் பார்வையில் இருந்து அதைமறைக்க, வெற்றிகொள்ள முடியா துப் போகிற மக்களின் ஜீவாதாரப்பிரச்சனைகளை பூசிமொழுக, இவர்கள் கை கொள்ளும் அரசியல் சாதுர்யங்கள் அலாதியானது! அதை வெளிப்படுத்தும் விதம் தீவிர அரசியல் கணக்கு சார்ந்தது! அவர்களின் திரைக்குள் யவரும் அத்தனை சீக்கிரம் தலை நுழைந்து, நிஜம் கண்டு விட இயலாது! கண்டுக் கொண்டவன், எழுத்தில் அதைச் சொல்லி மாளாது! அதன் பின்னல் அப்படி! அப்படியே சொன்னாலும், அதற்கு நேரம் செலவழித்து படிக்கவோ, அதை உள்வாங்கிக் கொள்ளவோ நம் மக்களுக்கு பொறுமை கிடையாது.

மக்களின் இந்த சாந்த, சொரூப, மயக்க நிலைதான் அரசியல்வாதிகளுக்குப் பிடிக்கும். அரசியல் வியூகங்களை வகுப்பதும், அதற்கான காய்களை நகர்த்துவதும் இந்தமக்களின் குணாதிசயத்தை நம்பித்தான்! அபூர்வமாக சிலநேரம் மக்கள் விழித்துக் கொள்வதும் உண்டு! அப்பொழுதெல்லாம் அரசியல்வாதிகளின் சலுகைகளும், இனாம்களும் 'தாம்தூம்' படும்! இந்த வகைக் கூத்துக்களை உள்ளடங்கிய நமது அரசியலை, தள்ளியிருந்து தீர ரசிப்பவனுக்கு அது தரும் ரசனை அலாதியானது! செய்தி தாள்களில் அரசியல் தலைவர்கள் வெளிப்படுத்துவது மாதிரி, அவர்களது அரசியல் நடவடிக்கை கள் பெரும்பாலும் வெள்ளையானது அல்ல! அப்படி நம்பும் நல்ல மனம் படைத்தவர்கள் வேறு பக்கங்களுக்குப் போய், 'சொடுக்கி' தீவிர கவிதைகளைத் தேடிக் கண்டு படிக்கலாம்.

வட இந்தியா அரசியலில் மிஞ்சிமிஞ்சிப் போனால் மத மாச்சரியங்களின் வீம்புதான் பெரிதாக இருக்கும்! மசூதியை இடித்து வம்புக்கு இழுப்பதும், சூலம் ஏந்திய சன்னியாசிகளை அரசியல் அரங்கத்தில் திரிய விடுவதும்! எதிராளி, முக்கிய தலைநகரில் குண்டு வைத்து கட்டிடங்களை தரைமட்டமாக்கி உயிர்களை துவசம் செய்வதும்! பொழுதுப் போகவில்லை என்றால் ரயில் பெட்டிகளுக்கு அவன் குண்டு வைப்பதும்! மீண்டும் முதல் வைரிகள், விட்டேனா பார் என்பதாக தங்களின் ஆட்சிக்கு கீழ் உள்ள ராஜியத்தின் சிறுபான்மையினரை தீக்கிரையாக்கி துவசம்செய்து, கையோடு தர்மநியாயம் பேச கிளம்பி விடுவதும்! அவர்கள் எதிரே பாதிரிகள் தென்பட்டால்.....
மண்ணெண்ணைத் டின்னையும் தீப்பெட்டியையும் பரபரக்கத் தேடுவதும்..... சகிக்க முடியாத காட்சிகள்! தமிழத்தில் இந்த மாதிரியான மண்டை குடைச்சல்கள் குறைவு. இந்த மண்டைக் குடைச்சல்கூட, தமிழகத்தில் வட இந்திய அரசியலின் தாக்கம் எட்டிப் பார்த்தப் பிறகுதான்! தமிழகத்து அரசியல் போக்கு என்பது முற்றிலும் வித்தியாசமானது! அந்த வகையில் நமக்கு கிடைத்த அரசியல் பாக்கியங்கள் நம்ம கலைஞரும் / புரட்சி தலைவி அம்மாவும்!

தமிழக அரசியல் போக்குகளின் நளினத்தை உள்வாங்கிக் கொள்ளும் யவரும் அதன் பிரமாத ரகத்தை ஒப்புக் கொள்ளவே செய் வார்கள். தமிழக மக்கள் மௌன சாட்சியாக பார்த்துக் கொண்டிருக்க / இந்துத்துவா பெரும் தலைகள் வேலூர் சிறைச்சாலை வாசலில் வந்து குவிந்து கர்ஜனை செய்ய / சங்கராச்சாரியார்களை செல்வி ஜெயலலிதா மாறி மாறி கைது செய்து சிறை வைத்த அழுத்தத்தை இந்திய மாநிலங்களில் வேறு எந்தவொரு அரசும் அப்படி கனவுகூட காண இயலாதது! அம்மா அப்படி யென்றால் இந்தப் பக்கம், கலர் டிவி / கேஸ் ஸ்டவ் / இரண்டு ஏக்கரா நில வாக்குறுதிகள் என்று மக்களை திளைக்க வைத்து அய்யா கலைஞர், அவர்கள் ஓட்டுகளை வாங்கி, அரியணையில் அமர்ந்த சுலபமும் சாதாரணப்பட்டது அல்ல! இந்திய அரசியலில் எங்கே தேடினாலும் இப்படியொரு சுலப தேர்தல் வெற்றிக்கும் வேறுமாநிலங்களில் முன் உதாரணங்களே கிடைக்காது! இவைகள் ஊடான அவர்களின் அரசியல் வியூகங்களை பெரும்பாலானவர்கள் அத்தனை சீக்கிரம் கண்டுப் பிடித்துவிடவும் முடியாது!

இன்றைக்கு செய்திகளின் வழியே நம் பார்வைக்கு விரிக்கப்படுகிற விசேச அரசியல் நடவடிக்கைகளில் முதன்மைப் பெற்றிருப்பது கலைஞர் குடும்பத்திற்கும் மாறன் குடும்பத்திற்குமான பகைமை குறித்த செய்திகளே! மதுரையில் தினகரன் பத்திரிகை அலுவலகம் தீவைப்பு! / மூவர் பலி! / என்பதில் இந்த அரசியல் நிகழ்வு தொடங்கி இருபத்தி ஐந்து நாட்களுக்குமேல் ஆகிவிட்டது. நம் தினசரிகள் இதுதொடர்பான அடுத்தடுத்த செய்திகளை தொடர்ந்து வற்றாமல், அலுக்காமல் இன்னும் வழங்கிக் கொண்டிருக்கிறது! நமது வாழ்வின் பகுதியாக மாறிவிட்ட நம்முடைய புலணாய்வு இதழ்கள், தங்களது பங்கிற்கு இதையொட்டி புதைந்திருக்கும் தகவல்களென ஏதேதோ செய்திகளை கொண்டு வந்து நம் தலையில், வாரத்திற்கு இரண்டுமுறை கணக்கில் திணித்துக் கொண்டிருக்கிறது.

தொடர்ந்து எழுதப்படும் அல்லது நமது தலையில் திணிக்கப்படும் அந்தச் செய்திகள், தினகரன் அலுவலகம் தீவைப்பை யொட்டி பத்திரிகை சுகந்திரத் தின் மீதான தாக்குதலின் எதிர்வினை என்றோ, அந்தத் தாக்குதலை நடத்திய மதுரை தி.மு.க.வின் 'நம்பர் ஒன்' பற்றிய எதிர்வினை என்றோ யாரும் கருதவேண்டாம்! இந்த தொடரும் செய்திகள் வேறு ரகம்! தயாநிதி மாறன் ராஜினாமாவில் துவங்கி, கலைஞர் டி.வி. வழியாக, அந்த டி.வி.க்கு ரஜினியின் சிவாஜி/மொழி போன்றப் படங்கள் எல்லாம் வாங்கப்பட்டு விட்டது, ஆகஸ்ட் பதினைந்தில் தொடங்கும் அந்த டி.வி.யில் முதல் பட ஒளிப்பரப்பே 'மொழி' என்பதாக துப்புத் துலக்கியப்படி, கனிமொழி மேல்சபை எம்.பி. ஆகும் செய்தியையும், அவருக்கு மத்திய மந்திரி பதவிகிடைக்க வாய்ப்பிருக்கிறது என்பதான ஹேஸியங்களும்தான் செய்திகளாகின்றன!

தினகரன் அலுவல தீவைப்பும்; அதில் மாண்ட மூவரும் என்கிற நிகழ்வை, செல்வி. ஜெயலலிதா ஆட்சியின் போது நடந்த தர்மபுரி பஸ் தீவைப்பு கொடுமைக்கு நிகராக தமிழ்ச் சமூகத்தால் பார்க்கப்பட்டது குறித்தோ, அன்றைய தினம் மதுரையில் ஆளும் கட்சிக்காரர்களாலேயே அவர்களின் அரசு பேருந்துகள் அடித்து நொறுக்கப் பட்டமைக் குறித்தோ, (தினகரன் கருத்துக் கணிப்பு வெளியிட்டப் பிரச்சனைக்கு, அவர்கள் அரசு பஸ்களை அடித்து நொறுக்கவேண்டிய அவசியம் என்ன? கொஞ்சம் அதிதமாக இல் லை?) சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய போலீஸ்துறை இந்த சம்பவத்தை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த வேடிக்கைக் குறித்தோ நமது ஊடகங்கள் தொடர்ந்து எழுதாததும், ஆட்சிக்கு வலுவான கண்டனங்கள் செய்யாததும் அதன் மரபு சார்ந்த நெறிக்கு உகந்ததாக இல்லை. ஜனநாயகத் தின் தூண்களில் ஒன்றான இந்த ஊடகங்கள் இனியொருதரம் எங்கேனும் நிஜத்தைப்பேச முற்படும்போது அதில் நம் கவனம் குவியும் என்று நான் நினைக்கவில்லை! மாறாக, அப்பொழுது சிரிப்பே எழும்.

தமிழக அரசியலை மூன்றாவது கண்கொண்டுப் பார்க்கும் எவரும், தினகரன் தீவைப்பை யெட்டிய நமது செய்திதாள்களின் செய்திகளோடு ஒருபோதும் ஓட்டமாட்டார்கள்! வெளியுலகில் பெரிய தலைகள் சிலர் கணிக்கிற மாதிரி, கலைஞர் கிழித்த சாணக்கிய கோட்டின் மீதே செய்திகளும் அதற்கான அரசியல் சம்பவங்களும் பயணிப்பதாக நம்ப இடமுண்டு. தவிர, தினகரன் தீவைப்பு ஒட்டிய சம்பவங்களின் / செய்திகளின் அதீதத்திலிருந்தே இதை சுலபமாக யூகிக்கவும் வாய்ப்பிருக்கிறது!

தமிழக அரசியல் விமர்சனத்தில் துக்ளக் திரு.சோவுக்கு வலுவானதோர் இடம் உண்டு! அதில், அவர் கெட்டி என்று இன்னும் பலர் கருதவே செய்கிறார்கள். இன்றைக்கு, இந்த வாழும் அரசியல் பிரச்சனைக் குறித்து அவர் என்ன சொல் கிறார் என்பதைப் பார்ப்போம். அவர் தனது பத்திரிகையின் எச்சரிக்கை பகுதியில் இப்படி எழுதியிருக்கிறார்:

'எச்சரிக்கை' / இந்த இதழ் அச்சாகிற தருவாயில், தயாநிதி மாறனை, மத்திய அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, முதல்வரை, தி.மு.க. நிர்வாகக் குழு கேட்டுக்கொள்ள - அதை ஒட்டி, தயாநிதி மாறன் ராஜி னாமா செய்திருக்கிறார். அவர் மீது கட்சி ரீதி யாக நடவடிக்கை எடுப்பது என்றும் தி.மு.க. நிர்வாகக் குழு தீர்மானித்துள்ளது.

தி.மு.க.வினரால் - முக்கியமாக கலைஞரால் - உருவாக்கப்பட்டவர்கள்,(கலைஞர் உதவியால் உதயமாகி, வளம் பெற்ற) சன் டி.வி. யின் 'சக்தி'யும், பண பலமும், தி.மு.க.வையே நிலை குலையச் செய்யக் கூடிய திறன் படைத்தவை என்று எண்ணி விட்டார்கள். அதன் விளைவுதான் இப்பொழுது நடந்திருப்பது.

தோல்வியைக் கூடத் தாங்கி விடலாம்; ஆனால் வெற்றியைத் தாங்கிக் கொள்ள, நிதானமும், மனோ பலமும்தேவை. அது இல்லை யென்றால், சிலர் பெறுகிற வெற்றிகளே, அவர்களுக்கு வினையாகிவிடும். இதை அரசியலில் முன்பும் பார்த்திருக்கிறோம்; பின்பும் பார்ப்போம்; இப்பொழுதும் பார்க்கிறோம். - துக்ளக் / 23.05.2007

தினகரன் பத்திரிகை தாக்குதல் ஒட்டி, தாயாநிதிமாறன் பதவி விலகியதை முதல்பாராவில் செய்தியாக தந்திருக்கும் சோ, பிறகான இரண்டு பாராக்களில் அவர் என்ன சொல்லவருகிறார் என்பதை நாம் அனுமானம் கொண்டுதான் புரிந்துக் கொள்ள வேண்டியிரு க்கிறது. கருணாநிதியால்தான் சன் டி.வி. இத்தனைக்கு வெற்றிப்பெற்றது என்றும், அந்த வெற்றிகண்டு அவர்களே பயந்துவிட்டார் கள் என்பதாகவும் சொல்லுகிறார். இன்னொரு தாக்குதலாக, மாறன் சகோதரர்களை நோக்கி 'வெற்றி குவித்திருக்கிற மலையளவி லானப் பணம், அது தந்த மம்மதையின் வினைகளால், இப்பொழுது அவர்கள் வீழ்ச்சியை எதிர் கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் சொல்வதாக யூகிக்க முடிகிறது.

இந்த பிரச்சனைக் குறித்து செல்வி. ஜெயலலிதா என்ன சொல்கிறார் என்பதை அவரது ஜெயா டி.வி. வாயிலாக அறிய முடிந்தது. தினகரன் சம்பவம் நடந்த நாள்தொட்டு நிறையத் தகவல்களை அந்த டி.வி. தந்து வருகிறது. 'கருணாநிதி குடும்பத்திற்கும்/ மாறன் குடும்பத்திற்கும்' நிகழும் 'ஈகோ' பிரச்சனையிது என் றும், கருணாநிதியின் குடும்பஅரசியல் சந்திச் சிரிக்கிறது என்றும் அது தூற்றி வருகிறது. துக்ளக் சோ, செல்வி ஜெயலலிதா மட்டுமல்ல பல்வேறு தரப்புக ளும், ஊடகங்களும் பெரும்பாலும் அப்படித்தான் கணி க்கிறது! எழுதுகிறது!

நமது தமிழக அரசியலின் நிஜமான தரிசனத்திற்கு மூன்றாவது கண் தேவைக் குறித்து மேலே சொல்லி இருந்தேன். அது அதிகம்! அரசியல்வாதிகளுக்கும் உண்மைக்குமான இடைவெளியை அறிந்தவர்களாக நீங்கள் இருந்தாலே போதும்! அரசியல்வாதிகள் உண் மையே பேச மாட்டார்கள் என்கிற யதார்த் தம் புரிய வந்தால்கூட போதும். ரெண்டும் ரெண்டும் நாலு என்பதுமாதிரி சின் னக் கணக்கு இது! இதையொட்டி எந்த அரசியல் நிகழ்வையும் நாம் எளிதாக கூட்டிக் கழித்து வகுத்துவிடலாம். என்ன.... பழைய அரசியல் நடப்புகளை யெல் லாம் கொஞ்சம் நினைவுப்படுத்த வேண்டியிருக்கும்! அதுதான் கஷ்டம்!

மாறன் சகோதரர்களின் சொத்துக் குவிப்பும் அதையொட்டிய அவர்களின் டாம்பிகம், அத்து மீறல்கள் என்பவை எல்லாம் தினகர னின் கருத்துக் கணிப் புக்கும், மதுரை தினகரன் தீவைப்புக்கும் பிறகே கலைஞர் அறிய வந்தாரா என்ன? என்கிற கேள்விக்கு இல் லை, அவருக்கு முன்கூட்டியே தெரியும் என் பதுதான் பதிலாக இருக்கமுடியும்! இப்பொழுது அதையேதான் கழகத்தினர்க ளும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழகம் - 2006, பொதுத்தேர்தல் காலத்தில், தமிழக தேர்தல் மேடைகள் தோறும் மாறன் சகோதரர்களைப் பற்றி, அவர்களது செல்வச் செறுக்கு / டாம்பீகம் / அத்து மீறல்கள்/ நாளை அவர்கள் எப்படியெல்லாம் தொழில் துறைகளிலும் விஸ்வரூபம் எடுக் கப் போகின்றார்கள் என்பது மட்டுமல் லாது, அரசியலிலும் அவர்களது கணக்குகள் வலுவானவை என்கிற பேச்சா கத்தானே இருந் தது. மதிமுகவின் பொதுசெயளாளர் வை.கோ. அதை சுட்டி முழங்கிய முழக்கம் கண்டம் விட்டு கண்டமல்லவா கேட்டது! அவர் மீது மாறன்சகோதரர்கள் கோர்ட்டில் மான நஷ்டஈடு வழக்கல்லவா தொடுத்தார் கள்! அந்த வழக்கை "கோர்ட்டில் இந்த வை.கோ. நேருக்கு நேர் சந்திப்பான்" என்றாரே அவர்! அந்த அளவுக்கு அன்றைக்கு மேடைதோறும், மாறன் சகோத ரர்களைப் பற்றிய சர்ச் சைகள் களைக்கட்ட, பத்திரிகைகளும் சுடச் சுட செய் திகளை அள்ளி வழங்கியதே!

இந்த பேச்சையொட்டி, மானநஷ்ட ஈடு வழக்கு தொடுப்பேன் என்ற மாறன் சகோதரர்களும், அதை சந்திப்பேன் என்ற வை.கோ. வும் இன்றைக்கு ஏதோ ஓர் ஒப்பந்தத்தில் கோர்ட் படியேறாது வழக்கைத் தவிர்த்திருக்கலாம்! ஆனால், அன்று பேசப்பட்ட நிஜங் களையும்/ அது குறித்த மான நஷ்டஈடு பேச்சுகளையும் மக்கள் அத்தனை சீக்கிரம் மறந்துவிட மாட்டார்கள்! இன்றை க்கு கலைஞர் எடுக்கும் நடவடிக்கையின் படியும்கூட, எல்லாம் முன்கூட்டியே அவர் அறிந்ததாகத்தான் செய்திகள் நமக்கு கூறுகிறது.

முன்கூட்டியே தெரிந்த ஓர் நிஜத்திற்கு, மாறன் சகோதரர்கள் மீது எந்தவொரு சின்ன நடவடிக்கையும் எடுக்காமல், அழகிரியின் அரசியல் செல்வாக்கு குறி த்த கருத்துக் கணிப்பையொட்டி தினகரன் அலுவலகம் கொளுத்தப்படும்வரை கலைஞர் ஏன் காத்திருந் தார்? சாதாரண கேள்வியாகத்தான் படுகிறது இது! ஆனால், அத்தனை எளிதாக கருதிவிட முடியாத வலுவான கேள்வியாக இது இன்றைக்கு மக்கள்மத்தியில் உலவுகிறது! இது குறித்து அவர்கள் சர்ச்சிக்கும் பதில்கள் ரொம்பவும் ஆழ்ந்த நோக்கு கொண்டவை. அவர்கள் போட்டு சொல் கிற கணக்கும்கூட அதிர்வலைகளை தரக்கூடியவை. இந்த கேள்விக்கான பதி லை நாம் தெரிந்து கொள் ளும் முன், மக்கள் மத்தியில் பேசப்படும் இன்னும் வேறு சில அலசல்கள் குறித்தும் அறியலாம்.

சட்லைட் டி.வி.ஒளிப்பரப்பிற்கான அனுமதியை இந்தியஅரசு வழங்கத்துவங் கியக் காலக்கட்டத்தில், வடக்கே இரண்டொரு சேனல் கள் அந்த அனுமதி யைப் பெற்று ஒளிப்பரப்பத் தொடங்கியது. அப்படி ஒரு ஒளிப்பரப்பு தங்களு க்கு தேவையென்று தி.மு.க. நினைத்தபோது, திரு.மாறனின் ஆலோசனையு டன் அதற்கு முயன்றார்கள். மாறனின் மூத்த மகனும், கலைஞரின் பேரனு மான கலா நிதி மாறனை முன் நிறுத்தி, அதற்கான அனுமதி பெறப்பட்டது. ஒரு சேனல் தொடக்கம் என்பது, அன்றைக்கே அது கோடிகளின் விவகாரம். பேங்கில் டெப்பாசிட் செய்யப்பட்டிருந்த தி.மு.க.வின் நிதி ஆதாரங்களை சாட்டுதலாக வைத்து, கடன் பெற்று சன் டி.வி. உதயமானது! இந்த வரலாற்றுப் பின்னணியை வை.கோ. அன்றைக்கே மேடைகளில் பேசினார்.

அன்றைக்கு புதிதாக கட்டப்பட்ட தி.மு.க.வின் தலைமைபீடமான அறிவாலய த்தில் அந்த டி.வி. பாதுகாப்பாக அமர்த்தப்பட்டது. அதன் வளர்ச்சிக்கு மத்திய அரசின் உறுதுணை அவசியப்பட, அங்கே ஆட்சியில் அமரும் அரசுகளை... அந்த அரசு அவர்களின் கொள்கைக்கு நேர்மாறான அரசாக இருந்தாலும் அதனோடு ஒட்டி உறவாட தி.மு.க. முனைந்தது. தி.மு.க.வின் சகல ஒத்துழைப் போடு சன் டி.வி. வளர்ந்தது. பின்னர் அது, சன் டி.வி. குழுமமாகி கிளைத்ததுக் கொண்டும் இருந்தது. அது கிளைக்கத் தொடங் கிய காலக் கட்டத்தில் கட்சிக் காரர்களின் குறுக்கீடு கூடாதென்றது சன் டி.வி.யின் நிர்வாகம்! அந்த உத்தரவு க்கு கலைஞரும், கழகமும் உத்தரவாதம் கொடுத்தது. இப்படியே தொடர்ந்து, 'கேபில் நெட் ஒர்கை' அதற்கு அமைத்து தந்ததில் இருந்து, பின்னாளில் அந்த 'நெட் ஒர்க்' அரசுடமையாக ஆக்கப்பட இருந்ததை தடுத்துப் பாதுகாத்து தந்த துவரை, கழகம் அதன் நலனில் குறியாகவே இருந்தது. முன்னூறு கோடிக்கு மேல் கொடுத்து முன்னால் அமைச்சர் கே.கந்தசாமி குடும்பத்திலிருந்து தினக ரனை சன் டி.வி. குழுமம் வாங்கியதிலும் கழகம் அதற்கு அதே பாதுகாப்பை தந்தது!

யதார்த்தப் பார்வையில், சன் டி.வி. அன்றைக்கு(ஆரம்பக் கலத்தில்) கழகத்தின் சொத்தாகவே கருதப்பட்டது! ஆனால்,அதன் வளர்ச்சி தொடங்கிய காலக் கட்டத்திற்குப் பிறகான காலங்களில் அது கலாநிதி மாறனின் தனிபெரும் சொத்தாக வலியுறுத்தப்பட்டு வந்தது. அதன் பங்குதாரராக கலைஞர் எப்பொழுது சேர்ந்தார்? எந்தஅளவில் சேர்ந்தார்? என்பதெல்லாம் என்றைக்கும், யாருக்கும் வெளிப்படாத செய்தி! 'K- டி.வி.' யை சன் டி.வி குழுமம் ஆரம்பித்த போது அது கலைஞரின் டி.வி. என்றே பேசப்பட்டது. அதன் விபரமும் நாம் அறியமுடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது. சமீப ஆண்டுகளில் தன் பங் காக கணிசமான கோடிகளைப் பெற்று, சன் டி.வி. குழுமத்தில் இருந்து விலகி விட்டேன் என்றார் கலைஞர்! இதன் விபரம்கூட யாரும் கேட்க முடியாத பக்க த்தைக் கொண்டதே! இப்பொழுது, சன் டி.வி. குழுமத்தால், கலைஞருக்கோ, அவரது சொந்தக் குடும்பத்திற்கோ அல்லது கழகத்திற்கோ ஏதேனும் வரவு வரும் தொடர்புநிலை உண்டா? தெரியாது!ஆனால், மாறன் சகோதரர்கள், கலைஞரின் பேரன்தான் என்கிற நிலைப் பாட்டின்படி, சன் டி.வி. அவரது குடும்ப குழுமம் சார்ந்த அசையா சொத்து என்பதில் இரண்டு கருத்திருக்க முடியாது.

முன்கூட்டியே தெரிந்த ஓர் நிஜத்திற்கு, மாறன் சகோதரர்கள் மீது எந்தவொரு சின்ன நடவடிக்கையும் எடுக்காமல், அழகிரியின் அரசியல் செல்வாக்கு குறி த்த கருத்துக் கணிப்பையொட்டி, தினகரன் அலுவலகம் கொளுத்தப்படும் வரை கலைஞர் ஏன் காத்திருந் தார்? அத்தனை எளிதாக தள்ளிவிட முடியாத வலு வானகேள்வியாக இன்று மக்கள்மத்தியில் இது உலவுகிறது! இது குறித்து அவர்கள் சர்சிக்கும் பதில்கள் ரொம்பவும் ஆழ்ந்த நோக்கு கொண்டவை. அவ ர்கள் இந்த கேள்வியை யொட்டிப் போட்டு சொல்கிற கணக்கும்கூட அதிர் வலைகளை தரக்கூடியவை! என்பதாக மேலே குறிப்பிட்டிருந்தேன். இங்கே, அந்த அதிர்வலை கணக்குகளை கவனிக்கலாம்.

ஆசிய அளவில், சன் டி.வி. குழுமம் முக்கிய ஸ்தானத்தில் இருக்கிறது. இதன் வருமானமும் பெருகிக்கொண்டே இருக்க, உலக அளவிலான பணக்காரர்க ளின் பட்டியலின் முக்கிய ஸ்தானத்திற்கு நகர்ந்தப்படி இருக்கிறார் காலாநிதி! நேற்றுவரை, தி.மு.க.வுக்கு பின்னால் சன் டி.வி. இருப்பதாக அறியப்பட்ட போது, அந்த டி.வி.யின் பணக்கார இமேஜ், தி.மு.க.வின் மீது படிந்தப்படியே இருந்தது! தவிர, கலைஞரின் வீட்டிற்குத் தேடிக்கொண்டு, உலகப் பணக்காரர்க ளின் வரிசையில் முதலிடம் வகிக்கும் மைக்ரோ சாஃ ப்ட் முதலாளியான பில்கேட்ஸும், இந்திய பெரும் முதலாளிகளான டாடா குழும முதன்மை நிர்வாகி ரத்தன் டாடாவும், ரிலைய ன்ஸ் அதிபதி மறைந்த அம்பானியின் மகனும், அபரிமிதமான சொத்துக்களுக்கு சொந்தக்காரரும் ஆன்மீகவாதியு மான புட்டப் பத்தி மஹான் சாயிபாபாவும், இன்னும் காரணமே இல்லாமல் சுல்தானாஃப் ஓமனின் இளவரசர் என்று பல குபேர பெருந்தலைகள் வந்தப்படி இருக்கிறார்கள்!

ஐந்து வருடத்திற்கு ஒரு முறை ஜனங்களிடம் ஓட்டு கேட்டு போகவேண்டிய கட்சிக்கு இந்த இமேஜ் பாதகமானது என்பதை கலை ஞர் அறிவார். அவருக்கு, எப்போதுமே எதிர்கட்சி தலைவியைவிட ஏழ்மை என்கிற அந்தஸ்த்தும் முக்கியம்! தன்னிடம் வருபவர் களுக்கு 'ஜெயலலிதா தாராளமாக பெட்டித் தருகிறார்' என்று கலைஞர் கூறிவந்தபோது, செல்வி ஜெயலலிதாவின் பணக்கார இமே ஜை ஜனங்கள் நம்பினார்கள். அந்த நம்பிக்கையின் யூடே செல்வி ஜெயலலிதாவை வெறுக்கவும் செய்தார்கள். இப்படியே தனது கட்சி, எதிர் கட்சியைவிட ஏழ்மைக்கொண்டது என்பதான இமேஜை ரொம்ப கால மாக கலைஞர் காப்பாற்றியும் வருகிறார்! அந்த இமேஜ் தரும் லாபம், மகத் தானது என்பதை அவர் அறிவார். செல்வி ஜெயலலிதாவிடம் இருந்து இரண்டு முறை ஆட்சியைப் பறி க்க அந்த இமேஜ் பெரியஅளவில் உதவியதை அத்த னைச் சீக்கிரம் அவர் மறந்துவிடவும் மாட்டார்! எனவே, சன் டி.வி. யாலும், மாறன் சகோதரர்களாலும் படியும் பணக்கார இமேஜை, தி.மு.க.வின் மீது ஒட்டாமல் தள்ளிவைக்க, வியூகங்களோடு கலைஞர் இப் பொழுது செயல் படத் தொடங்கி இருக்கிறார் என்பது விசயதாரிகளின் கணிப்பு.

தமிழகத்தில் தங்களுக்கென்று வலுவான ஊடகங்களை தவிர்க்க முடியாத பலம் பொருந்திய ஸ்தாபனமாக வளர்த்தெடுக்க வேண் டும் என்பது கலைஞ ரின் வெகுகாலக் கனவு! இந்து / தினத் தந்தி / மாலை முரசு / குமுதம் / போ ன்ற வளர்ந்த ஊடகங்களைப் பார்த்து அவர் மருண்ட காலம் ஒன்று இருந் தது. அன்றைக்கு அவரிடம் உதிர்த்த கனவுதான் அது! இன்றைக்கு சன் டி.வி., தினக ரன், தமிழ்முரசு, குங்குமம் போன்ற தங்களது ஊடகங்களின் பிரமாண்ட வளர்ச்சியில், அவர்தான் நினைத்த உயரத்தை தொட்டு விட்டார்! சட்லைட் டி.வி. / தினசரிகளில் காலை, மாலை / வாராந்திரியிலும் வெற்றி என்கிற வகையில் ஊடகங்கள் எல்லாவற்றி லும் அவர்கள் கூறிக் கொள்வது மாதிரி அவர்களே நம்பர் ஒன்! இந்த ஊடகங்களின் வெற்றிக்குப் பிறகு அவைகளை தள்ளி வைத்து நிலைப் படுத்துவதும், அவ்வப்போது (முக்கியமான நேரங்க ளில் மட்டும்) அவற்றின் ஆதரவைப் பெருகிற அளவில் அதன் உறவுகளை அமைத்துக் கொள்வதும்தான் சரியான முறை! இந்த சரியான முறையைத் தான் இப்பொழுது கலைஞர் சரி செய்துக் கொண்டிருக்கிறார்!

தி.மு.க.விற்குப் பின்னால் அவர்களது ஊடகங்கள் வரிசைக்கட்டி நின்று, தங்களது பலம் பொருந்திய நிலையையும் காட்ட, வெளி ஊடகங்களுக்கு திணரும் நிலை! அவர்கள் வெளிப்படையாக செயல்படுத்த முடியாத கழக எதிர்ப்போடும், மூச்சுத் திணரலோடும் மௌனம் காத்தார்கள். சன் டி.வி. ஏற்கனவே பத்திரிகைகளின் தனித்த லாப தண்டுவடத்தை முறித்து விட்டது! போதாதென்று ஒரு ரூபாயிக்கு அந்த குழுமம் தினசரி விற்க கிளம்பியது! பின்னே வெளிப் பத்திரிகைகள் மூச்சு திணராமல் எப்படி? இதே நிலமை இன்னும் அதிககாலம் நீடித்தால், அவர்களது ஒட்டுமொத்த எதிர்ப்பை கழகம் நேரிடையாக எதிர்கொள்ள வேண்டிவரலாம்! குறை ந்த பட்சம் தேர்தல் நேரத்தில் அவர்கள் ஒன்றுகூடி எதிர்த்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை! சன் குழும ஊடகங்களை தள்ளி வைப்பதாக நடவடிக்கை ஏதேனும் கழகம் எடுக்கும் பட்சம்தான், அவர்கள் எல்லோரும் கழகத்தை நெறுங்கிவர வாய்ப்புண்டு. கலைஞர் நாலையும் யோசிக்கக் கூடியவர்! இதற்கு வழி காண, அவர் காய் நகர்த்தாமல் இருப்பாரா யென்ன?

கலைஞரால் தீர்க்கப்பட முடியாதுப் போகிற, கர்நாடகாவோடான காவிரிப் பிரச்சனை, ஆந்திராவோடான பாலாறு, கேரளாவோ டான பெரியார் என்று எந்த பிரச்சையானாலும் அந்தப் பிரச்சனையின் வட்டத்திற்குள் சன் டி.வி. குழுமம் இடையிடையே வருகி றது. மேற்கண்ட மாநிலங்களில் சன் டி.வி. குழுமம் வேறு வேறு பெயர்களில் கொழுவீத்திருப்பதால் அந்த மாநிலங்க ளுக்கு எதி ராக தீவிரமான நடவடிக்கைகள் எடுக்க கலைஞரால் முடிவதில் லை.அப்படி நடவடிக்கைகள் எடுத்தாரேயானால், அது அங்கத்திய சன் டி.வி. குழு மத்தின் வியாபாரத்தைப் பாதிக்கும். தவிர, அந்தந்த மாநிலத்தில் உள்ள சன் டி.வி.க்கள் அவர்களுக்கான செய்தி களைத்தான் முதன்மைப் படுத்திச் சொல்கிறது. இது குறித்து இங்கே விமர்சகர்கள் அவ்வப்போது பத்திரிகை களில் எழுதி அவர் மண்டையைக் குடைகிறார்கள்.

இந்த காரணங்கள் பொருட்டும் சன் டி.வி. குழுமம் கழக வட்டத்திலிருந்து தள்ளி வைப்பதென்பது கட்டாயமாகிறது. சன் டி.வி. குழுமம் வேறு / கழகம்வேறு என்கிற நிலையெடுப்பதுதான் தி.மு.க.வுக்கு நல்லது. அப்பொழுதுதான் அவர்கள் நாளைய மக்களது கேள்விகளில் இருந்து தப்ப முடியும். இத்தனை நாள் அவர்கள், 'காசு பண விவகாரத்தில் செல்வி ஜெயலலிதாவைவிட பல நூறுமடங்கு அதிக வசதி வாய்ப்பு கொண்டவர்கள்' என்கிற தகவல் துல்லியமாய் மக்களிடம் போய் சேராமல் தப்பியதே அதிகம்! சன் டி.வி.யை, தள்ளி வைப்பது என்பதும் சாதாரண சம்பிரதாயமாக நடந்தால், அது மக்களிடம் எடுபடாமல்போக வாய்ப்புண்டு. சண்டை சச்சரவுகளோடு அதை ஹைலைட் செய்ய வேண்டும்! அதற்காகத்தான் மதுரை/ தினகரன்/ தீவைப்பு/ மூணுபலி எல்லாம்! இப்படி கணிக்கும் விசயதாரிகளின் கணிப்புகளை அந்த நொடியில் மறுக்க வலுவான சான்றோ, கேள்விகளோ ஏதும் என்னிடம் இல்லை.

அந்த விசயஞானம் கொண்ட கணிப்பாளர்களை, அப்படி வெறுமனே விட்டு விட முடியுமா யென்ன? அவர்களிடம் சின்னச் சின்ன வடிவிலான சில கேள் விகளை முன்வைத்தேன்.அவர்களும் அந்தப் பொட்டுகளின் மேல், பதிலாலும் எதிர் கேள்விகளாலும் சொல் கோலம் வரையத் தொடங்கினார்கள்! உன்னிப் பாய் கவனிக்கும்படி இருந்தது அது.

நிஜத்தில், தங்களது குடும்பப்பிரச்சனையை கழகப் பிரச்சனையாக மக்கள் சபையில் வைத்துத் தீர்க்க கலைஞர் முன் எப்பொழு தும் முயன்றது இல் லை! அவர்களது இந்தப் பிரச்சனையை, தங்களது குடும்ப உள்வட்டத்திற்குள் வைத்துத் தீர்த்துக்கொள்ள முடியவில்லை என்பது வியப்பானது! நாட்டின் பிரச்சனைகளுக்கு விரல்சொடுக்கில் தீர்வுகாணும் கலைஞருக்கு இந்தப் பிரச் சனை சுண்டைக்காய் சமாச்சாரம்! அந்த உள்வட்டத்திற்குள், கலைஞருடையப் பேச்சை மீற எந்த கொம்பனுக்கும் நிச்சயம் தைரியம் இருக்காது! மீறினார்கள் என்பதெல்லாம் அம்புலி மாமா கதை! கருத்து கணிப்பை ஒட்டி, மதுரை தினக ரன் தீவைப்பு சம்பவத்தை சன் டி.வி. தொடர் செய்தியாக்கியபோது 'தி.மு.க. காலிகள்' என்கிற வார்த்தையை திரும்பத்திரும்ப ஒளிப்பரப்பியது! இதன் பிற கும் பிற மாவட்டங்களில் உள்ள தினகரன் அலுவலகங்கள் தப்பித்தது எப்படி? தமிழ் நாடு பூராவும் சன் டி.வி. கேபிள் கனைக்சன்கள் அறுபடாமல் தப்பித்தது எப்படி? தலைநகர் சென்னையில் சன் டி.வி.க்கு தனி அலுவலகம் கட்டி முடிக் கப்பட்டதத் தருவாய் பார் க்க, இந்த சச்சரவுகள் மிகச் சரியாக எழுவதைக் கவனிக்க வில்லையா! உன்னிப்பாக மட்டுமல்ல, வியப்பாகவும் அவர்களை கவனித்தப்படி இருந்தேன். அவர்களின் சொல் கோலம் மேலும் முனைப்புடன் தொடர்ந்தது.

கலைஞர் டி.வி., ராஜ் டி.வி.யின் மேற்பார்வையில் நிர்வாகம் நடக்கும் என்கி றார் கலைஞர்! ஆனால், எல்லாப் பத்திரிகைகளும் எழுதுகின்றன ஸ்டாலி னின் மகன்தான் நிர்வாகம் செய்யப்போகிறார் என்று! 'தனது ராசியான கரத் தால்' அந்தப் பேரன்களுக்கு சன் டி.வி. ஆரம்பித்து வைத்தது மாதிரி, இந்தப் பேரனுக்கும் அதே ராசியான கரத்தால், ஒரு கலைஞர் டி.வி.! கலைஞர் டி.வி. உதயமாகும் மாதம், தேதி, கிழமை, நாழியெல்லாம் குறித்து விட்டார்கள்! ஆனால், இதன் பங்குதாரர்கள் குறித்த தகவல் இன்னும் மூடுபொருளாகவே இருக்கிறது! தயாநிதி மாறன் மீது கழகம் மேற்கொண்ட நடவடிக்கைகளின் அடுத்தக் கட்ட செயல்பாடு களும் புரியாமல்தான் இருக்கிறது! மந்திரிப் பணி யை விட்டுவிட்டு வந்த தயாநிதிமாறன், தனது அடுத்தக்கட்டப் பணியினை விரை வில் தொடங்குவார்! சன் டி.வி. குழுமத்தின் விமான சர்வீஸ் போன்ற அவர்களின் அடுத்தடுத்த வளர்ச்சியில் அவர் கவனம் கொ ள்ள வேண்டாமா என்ன! எல்லோருக்கும் பிடிப்படாத அரசியல் சதுரங்கத்தின் காய் நகர்த்தல்.... மதுரை சன் குழும வளாகத்தில் தொடங்கிய அந்த ஆட்டம், இன்றைக்கு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது. இரு சக்கர வாகனத்திற்கான தலைகவச கலாட்டா தான் அதன் முற்றுப் புள்ளி! இந்த பரபரப்பான கலாட்டாவில், முந்தைய பரபரப்பை மக்கள் மறப்பதும் யதார்த்தம்! கலைஞரின் பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது அடுத்தக் காட்சியின் தொடக்கம்! நான் கவன ஈர்ப்புக் கொண்ட, அந்த கணிப்பாளர்களின் விசேசக் கோலம், விஸ்தீரணமாக இன்னும் இன்னும் விரிந்தப்படியே இருந்தது! என்னிடம் தான் தொடர் கேள்விகள் இல்லை.

அந்த கணிப்பாளர்களோடான அடுத்த அமர்வில், எதிர்கட்சித் தலைவி செல்வி ஜெயலலிதா குறித்த அரசியல் சபையேறியது.தி.மு.க.வை அவர் பூண்டோடு அழிக்கும் சபதத்தை முன்வைத்து எல்லோரும் வாய்விட்டு சிரித்தார்கள். கலைஞர் இன்றைக்கு வானவெளியில் எலக்ரானிக்ஸில் கோட்டையே கட்டுகிறார்! இவர் என்னவென்றால்,எம்.ஜி.ஆர். மக்களின் இதயத்தில் கட்டி வைத்த எஃகுவான நிஜக் கோட்டையின் சாவியை தொலைத்தவராக அல்ல வா நிற்கிறார்! உத்திரப் பிரதேசத்திலேயே, ராம நாமத்தை ஜபித்த அரசியல் வாதிகள் இன்றைக்கு கைசேதப்பட்டு நிற்கிறபோது, பதினேழு லட்சம் வருஷ த்திற்கு முன்பான, ராமர்பாலம் குறித்த கவலை என்பதெல்லாம் தமிழகத்தில் அரசியல் செய்யும் இவருக்கு அதிகம்! ஒரு லட்சத்திற்கு எத்தனை சைபர் என்றால், திண றும் நம் பாமரமக்களிடம், இவர் பதினேழுலட்சம் வருஷ சங்கதிகளைப் பேசுவது வியப்பிற்குறியது! கலைஞரின் சன் டி. வி. குறி த்த நுட்பம் சார்ந்த அரசியலை விட, செல்வி ஜெயலலிதாவின் இந்த 'ராமர் பால' அரசியல் ஏகவிசேசம்! என்ற படி, சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் திணறினார்கள். கணிப்பாளர்களின் இந்த திணறலைப் பார்க்கவும் எனக்கு சந்தோசமாக இருந்தது.

*********
satajdeen@gmail.com