Friday, November 18, 2011

பிதாவின் பெயரால்...

எனக்குப் பிடித்த
புதுக் கவிதை கவிஞர்களின்
பட்டியலில்
என்.டி.ராஜ்குமாரின் பெயர் உண்டு.
இவர் மொழி மாற்றம் செய்துதந்த
மலையாள கவிதைகள் அனைத்தும்
ரசிக்கத் தகுந்தவை.

'பிதாவின் பெயரால்'
என்கிற இந்தக் கவிதை
அவர் எழுதியது.
இம்மாத குமுதம் தீராநதியில்
வாசிக்கக் கிடைத்தது.

இக் கவிதையின்
விசேச சிறப்பு கருதி
வாசகர்களின் பார்வைக்கு வைக்கிறேன்.

என்.டி.ராஜ்குமாருக்கும்
நவம்பர்-11
குமுதம் தீராநதிக்கும் நன்றி.

*
பிதாவின் பெயரால்
------------------

இம்முறை ஏசு
ஒரு முக்குவச்சியாகப் பிறந்து
பனைவினை கிராமத்தில்
மீன் விற்றுத் திரிந்தாள்.

குட்டையைக் கழுவ
தண்ணீர் எடுத்தபோது
ஊர் குளத்தைவிட்டு
வெளியேறெனச் சொல்லி
அடித்து விரட்டினார்
அந்தோணியர்.

கல்லெறியப்பட்ட
காயங்களோடு
சவேரியாரே ரட்சியும் என்று
சொல்லிக் கொண்டோடினாள்
மீனம்மா.

எது நடக்க வேண்டுமோ
அது
நன்றாகவே நடந்து கொண்டிருக்கிறது என்று
சொல்லியபடி.

கிழிந்த காற்றின் நடுவே
கடைவிழிப் புன்னகையை
வீசிப் பறக்கின்றதந்த

தேரோட்டியின் குதிரை.

*****

No comments: