Thursday, November 17, 2011

தொடங்கியது கவிதைக்காரனின் வித்தை

எண்ணங்களின்
அலைக்கழிப்பை
மன வண்ணங்களில் தொய்த்து
கோட்டுச் சித்திரங்களாக
எழுத்தில் வடிப்பவன்
கவிதைக்காரன்.
வித்தைகள் நிகழ்த்தாமல்
அவனால் ஓயவே முடியாது.
நிஜத்தில் கிறுக்கன் அவன்!

இரண்டே வரி என்றாலும்...
தினம் தினம் கட்டாயம்.
வாசக அன்பார்களே
வித்தியாசத்தை உணர்வீர்கள்.

*
இன்று
கார்த்திகை ஒன்று.
பனி தொடங்கி
பூமி குளிர்பட வேண்டிய நேரம்.
மாறாய்
நேற்றும் இன்றும்
கிழக்கு கடர்கறையொட்டிய
நகரங்கள்/ கிராமங்கள்/ குக் கிராமங்கள்
அத்தனையயும் நனைய நனைய
மழை சீற்றம் கூடிக் கொண்டே போனது.
பல மாவட்டங்களில்
பள்ளிகள் அத்தனைக்கும் விடுமுறை.
அப்படியொரு மழை!

எப்படிப் பார்த்தாலும்
மழை
சந்தோஷமான ஒன்றுதான்.

மாலை மழைவிட்டதுதான் தாமதம்
இடி இடித்த அதிர்ச்சி.
மின்கட்டண உயர்வு/
பால் விலைஉயர்வு/
பஸ் கட்டண உயர்வு/ என்று
அரசு அறிவிப்பை செய்திருக்கிறது.
இப்போது இரவு மணி 10.48
மண்டைக்குள்
இன்னும் அதிவு

போதும்
நண்பர்களே
பார்க்கலாம் நாளை.
- தாஜ்

No comments: