Thursday, May 22, 2008

தாஜ் கவிதைகள் - 30



செயல்
----------
எழு
நில்
நட
ஓடு
வேகம் பிடி
உயர்
பற.....
முடியுமென்றாவது நினை
முயற்சி செய்
தோல்வியும் நிகழலாம்
பரவாயில்லை
போராடு
கட்டாயம்
முடவனிடமிருந்து
மாறுபடு.
******

வித்தியாசப்படு
-----------------------
எல்லோரும்
கத்திரிக்காய் வாங்கினால்
நீ
வெண்டைகாயாவது வாங்கு
அவர்கள் இல்லை நீ
எவருமில்லை எவரும்
இயற்கையை மீறுவானேன்
சுவை கிடக்கட்டும்
ஆரம்பி.
****

மேல் நிலை?
------------------
மேலே பார்க்கிறாயா? பார்
உற்றுவேறா?
சரிகவனம் செய்.
உயரத்தில்
மேகமெல்லாம் தெரிகிறதா?
கலர் கலராய் நெளிகிறதா?
பகலில் சூரியனும்
இரவில் சந்திர
நட்சத்திரங்களும்
மாறி மாறி
பரவசமூட்டியதா!
என்ன........
பார்த்து விட்டோமென
பூரித்துவிட்டாயா?
பொறு
தாண்டி??
****
satajdeen@gmail.com

No comments: