
டைனோசார் வம்சம்.
-----------------------------
- தாஜ்
வழக்கொழிந்த
பண்டைய மிருகங்களின்
மூலக்கூறுகளைத் தேடி
தடயங்களின்
ஆய்வு நடக்கிறது.
வியப்பான கணிப்பில்
சிக்கியதோர்
அரக்கப் பிசிறு.
பெயர் : டைனோசார்
காலம் : பில்லியன் ஆண்டுகள் முன்
இடம் : உலகின் பல பாகங்கள்
குணம் : அரக்கம்
உணவு : சைவம், அசைவம்
அழிவு :
1. உணவின் நிமிர்த்தம்
2. சொந்த பகைமை
3. வாழ்நாளின் பூகம்பம்.
பூரண மூலக்கூறுகள் கிட்டவில்லை
ஆய்வுகள் நடக்கின்றன
வாய்ப்புகள் உண்டு
ஆய்வாளர்கள்
தாங்கள் நிற்கும்
மண்ணையும்கிளர வேண்டும்
ஏன் என் காலடி
மண்ணிலும் சாத்தியம்!
******
satajdeen@gmail.com
No comments:
Post a Comment