Monday, May 21, 2007

'நிலவு ததும்பும் நீரோடை' கவிஞர் பஜிலா ஆசாத்தின் அழகியல்! - தாஜ்..


*
இந்த வருட புத்தகக் கண்காட்சிக்கு சென்னை சென்றிருந்தபேது, மணிமேக லைப் பிரசுர அலுவலகத்திற்குப் போகவேண்டிய சூழல். அவர்கள் பிரசுரித்த ஓர் கவிதைத் தொகுப்பு குறித்து அங்கே செய்தி பரிமாறப்பட்டது. நிலவு ததும்பும் நீரோடை / கவி தைத் தொகுப்பு / பஜிலா ஆசாத் / புதுக்கவிதை உலகத்திற்கு மேலும் ஓர் புதிய கவிஞர் என்றார்கள். அந்த கவிஞரின் கவி தையை நேற்றுவரை நான் வாசித்தது இல்லை. நம் சிற்றிழக்கிய இதழ்களில் எழுதியதாகவும் தெரியவில்லை. கவிஞரின் பெயரே கூட அந்த தருணம்தான் அறிய வந்தேன். பாராத அந்த கவிதைகளை வாசிக்க ஆர்வம் கூடியது. மணி மேகலையில், அந்தத் தொகுப்பு வேண்டுமே என்ற போது, என் ஆர்வத்திற் கேற்ற பதிலைத் தந்தார்கள். "அது சென்ற வருடத்தியப் பிரசுரம், விற்றுத் தீர்ந்து விட்டது!"
*
நினைவாய், அந்த கவிதைத் தொகுப்பை நண்பர்கள் வழியே தேடிய விதத்தில், சீக்கிரமே கிடைத்தது. அதன் அட்டைப் படம், மணிமேகலைப் பிரசுரத்தின் முத்திரை சங்கதி! இரவு காட்சியில் மலைத்தொடர் / மேலே பந்து சைஸில் பளிச்சென்று ஓர் நிலவு / 'ஆறு மாதிரி நீர் பெருக்கெடுத்த' ஓடைக் காட்சி / அந்த நீர்பரப்பு முழுவதிலும் ததும்பத் தெங்கித் தெரியும் வெள்ளி நிலவொளி! 'நிலவு ததும்பும் நீரோடை' என்கிறத் தலைப்பை சற்றும் சந்தேகமற புரிவைத் திருந்தார்கள்! ஆனால், அந்த தலைப்பிற்குறிய கவி தையோ, நட்பை நினைவு கொண்டு சிலாகிக்கும் மனித மனதின் ததும்பல்!
*
வாஸ்த்து சாஸ்த்திரம், நாடிஜோதிடம், கிரகங்களின்பலன், தன்னம்பிக்கை, மாத விடாய் காலங்களில் பெண்கள் கைகொள்ள வேண்டிய எளிய வழிமுறை கள், முதலான புத்தகங்களை ஆர்வமாய் வெளியிடும் ஓர் பதிப்பகத்திற்கு கவி தை வெளியீடென்பதெலாம் கொஞ்சம் சிரமமானப் பணிதான்!
*
தமிழ்க் கலை இலக்கியப் பரப்பில், சிறுபான்மையினர்களாகிய முஸ்லீம்களின் ஈடுபாடு என்பது அறிதான விசயம். இங்கே அவர் களை விரல்விட்டு எண்ணி விடலாம். கவிதையில் ஆர்வம் காட்டும் ஆண்படைப்பாளிகள் மட்டும் எதன் பொருட்டோ எல்லா காலத்திலும் சற்று கூடுதலாகவே இருந்து வருகிறார் கள். கதை, கட்டுரை எழுதுபவர்கள் அரை டஜன் தேறினால் அதிகம். பெண் கவிஞர்களை எண்ண வேண்டியதே இல்லை. 'சல்மா' என்பதற்கு மேல் விரல் மடக்க முடியாது. அத்தனைக்கு வறட்சி! ஆனால், இன்றைக்கு இன்னொரு விர லை நாம் தைரியமாக மடக்கலாம். பஜிலா ஆசாத்! நிலவு ததும்பும் நீரோடை! இது அவரது முதல் கவிதைத் தொகுப்பு என்றாலும், இதில் காணும் பல கவி தைகள் நாளைய கவிதைகான நிறைச் சூல் கொண்டிருக்கிறது.
*
ஆற்று மணலில்
முக்குளித்து
வேப்பங்கொட்டை
முத்தெடுத்து
ஒற்றைக் கடையில்
விற்று வாங்கி ஒதுக்கிய
கல்கோனாவில்
லேசானதொரு வேப்பம் வாசம்!
*
/ கவிதை: கனவுக் காலம் /
*
இளம் பிராயத்தை நினைவுக் கொள்ளும் அவரது கவிதைக் காட்டும் சித்திரம் விசாலமானது. இன்றைய புதுக்கவிதைப் படைப்பா ளிகளின் தேர்ந்த நுட்பம் கொண்ட சாயல் மிக எளிதாக இவருக்கு வாய்திருப்பதை அதில் காணமுடி கிறது. இன்றைய வளர்ந்த நிலையில் நின்று, தனது பால்யத்தை மிகத் தேர்ந் தெடுத்த வார்த்தைகளில் மிளிரச் செய்திருக்கும் அவரது கவிதைவண்ணம், நமது உன்னிப்பான வாசிப்பை கோருகிறது.
*
இரசம் போன
பெல்ஜியம் கண்ணாடிக்குள்
பொதிந்த பொக்கிசமாய்
என் பிள்ளைப் பருவத்து
பால் முகம்....
பன்னாட்டு நிறுவனத்தின்
பெயர்ப்பலகை வீட்டின் முன்...
அந்நியமாய் நான்!
*
/ கவிதை: தொழிற்புரட்சி /
*
கவிதையில் அவர் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதை வாசிக்கிற
போதே நமது கவனம் நம்மையும் அறியாமலேயே உன் னிப்படைகிறது. புதிய கவிஞர் என்று அசட்டையாக அணுகமுடியாதப்படிக்கு நுட்பமான சூட்சுமங் களுடன் அவரது கவிதைகள் பிரக்ஞை கொண்டு இருக்கிறது.
*
கவிதை தேடி என்னுள் நுழைந்த
கனவுகளெல்லாம்
காய்ந்து திரும்பின
வெடிக்காத மூங்கில் பாளையில்
மோதி மோதி நொந்து
திரும்பும் காற்றைப்போல.
*
அவசர வாழ்வின் சிடுக்குகளில்
மெல்ல... மெல்ல....
என்னைத் தொலைத்திருந்த நான்
உன்னை அள்ளி
என்னுள் ஊற்றிக் கொண்டேன்
உன் அனுமதி இன்றியே!
*
விழிகளை சற்றே மூடி
என்னுள் இறங்கி
மனதின் மர்ம முடுக்குகளில்
சஞ்சாரம் செய்கிறேன்
*
அங்கே
காலியாய் இருந்த
கோப்பைகள் எல்லாம்
நிரம்பி வழிகின்றன
*
மனதில் எழும்
ஞாபக அலைகளை எல்லாம்
பௌர்ணமியாய் ஏன்
நீயே இழுக்கிறாய்?
*
உறக்கம் மறந்த இரவின்
நிசப்தத்தைக் கூட
உன் சொந்தமாக்கி விட்டாய்!
*
நொடிக்குள் யுகங்களை
சிறைவைத்த என்
அன்பு ஸகியே...
*
நினைவு ஓடையின்
சிறு சிறு சிலும்பல்களும் தழும்பல்களும்
உன்னிடமே துவங்கி
உன்னிடமே முடிகின்றன.
*
/ கவிதை: நிலவு ததும்பும் நீரோடை /
*
உறவாடிய நட்பை, வெகுநாட்கள் அல்லது காலம் பிரியநேரும் தருணங்கள் இங்கே எல்லோருக்கும் நிகழ்ந்துவிடக் கூடியதுதான்.அப்படியானதொரு வெறு மைப்பொழுதுகளில் கிளர்ந்தெழும் ஞாபகஅலைகள் ஓய்வதில்லை! இப்படி ஒரு அலைக்கழிப்பில் ஆட் படும் கவிஞர், அந்த மனநிகழ்வை கவிதை வார்த் தைகளுக்குள் பொதித்து இப்படி வெளிப்படுத்தியிருக்கும் விதம் மெச்சும் படி யானது!
*
"அனுபவம் கவிதையாவது சிருஷ்டியின் நுட்பம், அனுபவம் ஏதோ வடிவத் தில், தனியான பிரஞையின் பாதிப்பில் கலை உயிர் பெற்று, மனித மனங் களை, பேரனுபவத்தின் விரிவில் தள்ள முயல்கிறது. இந்த முயற்சிக்குத்தான் கவிதை என்று பெயர்." சுந்தர ராமசாமியின் இந்த கூற்று இங்கே கவிஞர் பஜிலா ஆசாதின் பல கவிதைகளில் அழகியல் கூட உருகொண்டிருக்கிறது.
*
'உன்னால் நான்' என்கிற அவரது கவிதை, மிக பெரிய பிரமாண்டத்தை தேர்ந்த சில வரிகளில் தொட்டுக்காட்டி செல்லும் நயம்,நம்மை கவிதையூடான பேரா னந்த தரிசிப்புக்கு இட்டுச் செல்வதாகவும் இருக்கிறது!
*
ஒவ்வொரு சுகந்த நேரமும்
உன்னையே நினைவுறுத்துகிறது.
உருவமின்றி அணைத்துச் செல்லும்
காற்றும்....
மேனிதொடாமல் கிசு கிசுக்கும்
மெல்லிசையும்...
துளித்துளியாய்த் தழுவி
சட்டென்று பற்றிக் கொள்ளும்
அந்த மழையும்...
உன்னையும்
உன் நினைவுகளையும்
என்னுள் கொட்டி
என்னை உயிப்பிக்கிறது.
உற்சாக கணங்களில்
உன்னுடன் வாழ்கிறேன்
சோர்ந்த நேரங்களில்
உன்னுள் உறைகிறேன்!
*
/ கவிதை: உன்னால் நான் /
*
தன்னை, தனக்கு உகந்ததோர் பிரமாண்டத்தோடு தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ளும் நிலையை இந்த கவிதையில் கவிஞர் பேசுகிறார். அந்த பிரமாண் டம் பெற்றோராகவோ, கணவராகவோ, அல்லது அவர் நம்பும் பரம்பொருளா கவோ இருக்கலாம்!என் உள்வாங்களில், அவர் தனது ஏக இறைவனைதான் அப்படி ஒரு அசாத்திய கவிதை மொழியில் விசேசப்படுத்தியிருக்கிறார் என்றே ரசித்தேன். மகா வார்த்தைகளில் எல்லோரும் பேசும் ஓர் பொருளை இவர் இப்படி சிலவரிகளில் துள்ளியம் காட்டியிருப்பது கவனிக்கத்தக்கது. உன் நினைவுகளால் / அந்நிய நாட்டில் (வேறு) / ஹைபுன் / பெண் / கனவிலும் நிஜம் / விடுமுறை திட் டம் / சற்றே என்னோடு நான் / - போன்ற கவிதை களில் கவிஞரின் மனம் சார்ந்த நுட்பத்திலும் நுட்பமான வெளிப்பாடு அவரது கவிதை வாசிப்பை அர்த்தப்படுத்தி விடுகிறது.
*
கார்மேகம் திரண்டு
கடலலைமேல் நடத்தும்
ஜலதரங்கத்தை நான்
ரசித்திருக்க மாட்டேன்....!
*
அன்றலர்ந்து சிரிக்கும்
ஒற்றைப் பன்னீர்ப்பூவின்
சிறுதுளித்தேனை
நான்ருசித்திருக்க மாட்டேன்
*
தென்றலின் வருகைக்காய்
திறந்திருக்கும் ஜன்னல்வழி
புயல் வரும் சில பொழுதில் நான்
விழாது நின்றிருக்க மாட்டேன்....!
*
அன்பே...
அன்று
உன்னைப் பிரிக்க முடிந்தவர்களால்
உன் நினைவுகளையும்
பிரிக்க முடிந்திருந்தால்....!
*
/ கவிதை: உன் நினைவுகளால் /
*
ஈட்டி முனைகள் பளபளக்க
குதிரைக் குளம்புகள் தடதடக்க
எதிரி நாட்டு மன்னனின் படை....
நெஞ்சு நிமிர்த்தி
திட்டங்கள் வகுத்து
அம்புகள் எய்து
ஆள்பவனைப் பிடித்து
அரியணை ஏறும் நேரம்
கனவுகள் ஏனோ
கலைந்து விடுகின்றன!
*
/ கனவிலும் நிஜம் /
*
எனக்காக நீ
விலக்கிய விசயங்களால்
உன் உள்ளத்தில்
வலியிருக்கலாம்
*
பூமிக்கு வலிக்குமென
விதை நினைத்தால்
செடிகள் வளர்வதெங்கு?
*
புரிந்துகொள்
நான் மலைகளை
அழிக்கவில்லை
சாலைகளை உருவாக்குகிறேன்!
*
/கவிதை: முடிவல்ல ஆரம்பம் /
*
வெட்ட மனமில்லை
பட்ட மரத்தை
கிளையெங்கும்கூடுகள்!
*
/கவிதை: பயன் /
*
கொட்டும் மழையில் வியர்க்கிறது
நனைந்து விடுமோ
குருவிக் கூடு!
*
/ கவிதை: இதயத்தின் பார்வையில்... /
*
காற்றைக் கிழித்துச் செல்கிறது கார்
சாலையைக் கடந்து விடுமா
அந்த வண்ணத்துப் பூச்சி!
*
/ கவிதை: துடிப்பு /
*
இப்படி, இந்த கவிதைத் தொகுப்பில் அழகான குறுங்கவிதைகளும், நமுட்டுச் சிரிப்பையும் சிலநேரம் சுருக்கொண்ற வலியையும் தரும் ஹைக்கூ கவிதை களும் நிறையவே இடம் கொண்டிருக்கிறது. கவிஞர் தான் எழுதிய எதையுமே தள்ளிவிடாது, 'உயர்ந்த தாய்மையின்' பரிவோடு அத்தனைக்கும் பிரசுர அந்த ஸ்த்து தந்திருக்கிறார்
*
இவரது கவிதைகள் ஏழ்மை கண்டு இறங்குவதாகவும், அனைத்து உயிரங்க ளின் மீதும் பரிவு கொள்வதாகவும் இருக்கிறது. தவிர, வண்ணத்துப்பூச்சி, காலை உதயம், மாலை சூரியன், கடல், ஓடை, காற்று, பாலை, பனிக்காலம், சருகு என்பதான இயற்கைப் பரி மாணங்களை குறியீடாக்கி கவிதைகளூடே தனது அழகியலை அமர்க்களப்படுத்தி இருக்கிறார் கவிஞர்! வாசித்த அவரது இந்தக் கவிதைகள் கொண்டு கணிக்கிறபோது, சகோதரி திருமதி. பஜிலா ஆசாத் அவர்களின் அடுத்த கவிதைத்தொகுப்பு இன்னும் கலை நுட்பம் கூடி யதாக மலர வாய்ப்புகள் அதிகம். அப்படி ஒரு தொகுப்பின் வரவுக்காக, எதிர் பார்ப்புகள் கூட காத்திருப்போர் பட் டியலில் நானும் ஒருவனாக்கிறேன்.
*******
நிலவு ததும்பும் நீரோடை /
பஜிலா ஆசாத் ., M.C.S.E., M.CD.B.A., C.E.H., C.C.N.A., M.B.A.,
மணிமேகலைப் பிரசுரம்,
தணிகாசலம் சாலை
தியாகராய நகர்
சென்னை - 600 017
****

No comments: