தாஜ் கவிதைகள் - 16
மனுஷி.-----------காலத்திரை தாண்டிதாய்ப்பாலைமறந்த வயதை மீட்டுக்கோலமிடும் நினைவு.ஒரு நரைத்த உடம்பில்நான் நுகர்ந்த அதுகண்டு தெளிந்தஞானங்களையும் விஞ்சும்.உருமாறிக் கல்வியெனபதினாறில் விழுந்துபருவத்தை ஊதிநிஜத்தைச் சுட்டுகண்களில் அப்பிய மேடைநிழல்களை லாகிரித்துபஞ்சம் பிழைக்கவெனபாலையில் திரிந்துபறந்த நாட்களிலெல்லாம்என் சிறகுகள்நோகாதிருக்கஅது வாடும்வதங்கும்திசை பார்த்து.முதிர்ந்த அழகின்தேங்கிய வசீகரத்தைதுருவாய்காலம் தின்றபோதும்தவசு பேரன்னான்இமைகளுக்குள்பத்திரமானேன்.தாயினும் தாயானஅந்த உச்சிப்பூகாணாவோர் நாளில்உதிர்ந்ததுகசிந்த அதன் கடைசி சுவாசத்திலும்என் நினைவின்உச்சி முகர்ந்து.
*********
satajdeen@gmail.com
5 comments:
What is your opinion about Chru Nivedita?
wonderful poem,
பாலாவுக்கு....
எங்க ரவி(சாரு) இங்கே உள்ள கலை இலக்கிய எழுத்தாளர்கள் நூறு பேர்களு க்கு சமம். அவர் கற்றுக் கொண்ட
'ஸ்டையில்'அல்லது அவரின் குறைப் பாடான ஏதோ ஒன்று அவரை அதிகம் அலைக்கழிக்கிறது.
காலம், மாற்றங்களை நிகழ்த்தவல்லது.
அவரிடமிருந்து நுட்பங்கள் கூடிய நிஜ மான இலக்கியத்தை அது ஆக்கும்.
நம்புவோம். எனக்கு முழு நம்பிக்கை யுண்டு.
பின் குறிப்பு:
அவரது ஸ்டைலைக் கண்டு மிரளக் கூடியவராக நீங்கள் இருக்கும் பட்சம்.. அது தேவையில்லாதது, ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு நிறம் காட்டும் யுக்தி மட்டுமே அது!
Thanks! I noticed the same saru's change his style of writings... more like after every experience. that might makes him to understand something else and his narration shows i guess.
Also I agree with your friend's quote on JK's phil, if one is rich enough to do no work for day to day lives, can talk more philosophy
பாலாவுக்கு.....
உங்கள் வருகைக்கு நன்றி.
இந்த முறை நீங்கள், J.K பற்றிய
மேற்கோல் காட்டியிருப்பதில்
மிகுந்த மகிழ்ச்சி எனக்கு. J.K யை நான் படித்த நாட்களில் நான் கொண்ட
கிளர்ச்சிக்கு அளவே இல்லை!
அந்த கிளர்ச்சிக்கு வயது பதினைந்து.
உங்களை மாதிரி சிலர்தான் எப்பவாவது
J.K வைப் பற்றி பேசுகிறார்கள்.
நன்றி!
Post a Comment