நம் மூதாதையர்கள் 
சிக்கிமுக்கிக் கல்லை
கண்டு கொண்டபோது
தெறித்த கனலைப் பற்றவைத்து
பயன்படுத்தத் தொடங்கினர்
இருட்டிலிருந்த 
தங்கள் முகங்களை
ஒருவருக்கொருவர் காண
சிறைப்படுத்தியிருந்த 
காடுகளைக் கொளுத்தி
விஷமிகளை விரட்டி
இரத்தத்தை உறிஞ்சிய
அட்டைகளையும் பொசுக்கி
பாதைபார்த்து அடியெடுத்து
பொந்துகளை விட்டும் 
சமதளத்திற்கு வந்தனர்
காலங்களில் 
தீயின் பாதுகாப்பு
வளையத்திற்குள்
செரிக்க உண்ணவும் 
உரக்க உறங்கவும்
நிம்மதி கொண்டனர்
கற்கால மனிதர்களின் 
நசிவையும் சிதைவையும்
ஆய்வு செய்யும் 
வெளுத்த தோழர் வீட்டில்
சிக்கிமுக்கிக்கல் 
பார்க்கக்கிடைத்தது
அடர்ந்த வெண்தாடியோடு 
பெரியார் ஒருவரின்
கனல் முழங்கும் 
சித்திரக் காலடியில்
நமது நாகரீகம் 
நெருப்பில் தொடங்கியது
என்ற குறிப்புடன்.
***
பின் குறிப்பு:
இக்கவிதை
ஓர் மறு பிரசுரம் 
satajdeen@gmail.com
 
1 comment:
ஏற்கனவே படித்தது தான். இது குற்றம் கண்டுபிடிக்கும் நோக்கத்துடன் பார்த்த அவரது பார்வை. இதோ இவர்களது பார்வையையும் பாருங்கள்
http://www.youtube.com/watch?v=wkSLtAEnGPQ&feature=player_embedded
Post a Comment