Wednesday, November 23, 2011

கண்ணியமானவர்களின் பார்வைக்கு.....

இக்கட்டுரை
திண்ணை
20 நவம்பர் 2011 இதழில்
வெளிவந்த ஒன்று.

என் நண்பர்கள்
இக்கட்டுரையை
நம் வாசகர்களின்
விவாதத்திற்கு வைக்குமாறு
வலியுறுத்த
இங்கே இப்போது
அதனைப் பிரசுரிக்கிறேன்.

"வாசகர்களின்
வலியுருத்தலெல்லாம் இல்லை.
இந்த மறு பிரசுரம்
கவிதைக்காரனின்
இன்னொரு கலகமே" யென
நீங்கள் கூறுவீர்களேயானல்...
அதையும் மறுப்பதற்கு இல்லை.
எல்லாவற்றிலும்
கொஞ்சம் கொஞ்சம் நிஜமிருக்கிறது.

-தாஜ்

***

இஸ்லாமா அல்லது மதசார்பற்ற மனித நேயமா?
----------------------------------------------
-டாக்டர் காலித் சோஹைல்


(குறிப்பு: இந்த பேச்சு மேற்கத்திய ஒன்டாரியோ, கனடா பல்கலைக்கழகத்தின் முஸ்லீம் மாணவர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த மார்ச் 9, 2011 விவாதத்தில் வழங்கப்பட்டது ஹம்சா ட்சோர்டிஸ் (Hamza Tzortzis) இங்கிலாந்தைச் சேர்ந்த முஸ்லீம் அறிஞர், மற்றும் டாக்டர் காலித் சோஹைல் இடையே நடந்தது)

பெரியோர்களே, தாய்மார்களே,

நான் இஸ்லாமிலிருந்து வெளியேறி மதசார்பற்ற மனிதநேயத்தை அடைந்த என் பயணத்தின் சிறப்பு பகுதிகள் மற்றும் சில கருத்துக்களை பகிர்ந்து கொள்ள மேற்கத்திய ஒன்டாரியோ பல் கலைக்கழகத்தில் என்னை அழைத்த முஸ்லீம் மாணவர்கள் சங்கத்துக்கு முதலில் நன்றி செலுத்துகிறேன். தசாப்தங்களாக நான் இந்த உலகில் எத்தனை ஜோடி கண்களை கொண்ட மனிதர்கள் இருக்கிறார்களோ அத்தனை உண்மைகள் உள்ளன என்று படிப்படியாக உணர்ந்த நிலைக்கு வந்தேன். எனவே இன்று நான் உண்மையென உணர்ந்ததை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். அதே போல உங்கள் சொந்த உண்மையை உணர்ந்து அவற்றை பகிரங்கமாக பகிர்ந்துகொள்ள உங்களை ஊக்குவிப்பேன் என்று நம்புகிறேன். என் கதை, தனிப்பட்ட தத்து வார்த்த மற்றும் அரசியல் பரிமாணங்களை கொண்டிருக்கும்.

பல மதநம்பிக்கைகளை கொண்ட, பல கலாச்சாரங்களை கொண்ட இந்தியாவை 1947 ஆம் ஆண்டு பிரித்து உருவான பெரும்பான்மை முஸ்லீம் நாடான பாகிஸ்தானில் நான் பிறந்து வளர்ந்தேன் என்பதை நீங்கள் தெரிந்திருக்க கூடும். அந்த சூழலில் வளர்ந்த நான், இந்துக்கள் அல்லது சீக்கியர்கள், புத்தமதத்தினர் அல்லது பார்சிகளை சந்தித்ததே இல்லை. ஆகவே என் கதை முஸ்லீம் நாடுகளில் பிறந்து வளரக்கூடிய மில்லியன் கணக்கான குழந்தைகள் கதை களை போலவே இருக்கும். இப்போது திரும்பி பார்க்கையில், நான் ஒரு மத குடும்பம், சமூக மற்றும் கலாச்சார, சமூக, மத மற்றும் கலாச்சார சூழ்நிலை நமது மூளையை எப்படி மாற்றும் என்று அறிந்துகொள்ள முடிகிறது. எவ்வாறு மற்ற முஸ்லீம்கள் வானத்திலிருக்கும் ஒரு இறைவன், புனித நூல், தீர்க்கதரிசிகள் மற்றும் மரணத்துக்கு பின்னான வாழ்க்கை ஆகி யவற்றை ஏற்றுகொள்கிறார்களோஅதே போல நானும் ஏற்றுகொண்டு முஸ்லீமாக ஆனேன்.

ஒரு இளம்பருவத்தில் நான் அற்புதங்களை நம்பிக்கொண்டிருந்தேன். ஆனால் அறிவியல் மற் றும் இய்றகை விதிகளை படித்த பின்னால், நான் எனது குருட்டு நம்பிக்கை மற்றும் மத மர புகளை கேள்வி தொடங்கினேன்.

1965 ல் பாக்கிஸ்தான் இந்தியாவுடன் 17 நாள் நடத்திய போரின் போது, நான் என்னை சுற்றி விழும் குண்டுகளைப் பார்த்தேன்; தப்பிப்பதற்காக அகழிகளை தோண்டிகொண்டிருக்கும் மக்க ளைப் பார்த்தேன். பல மௌலானாக்கள், முஸ்லீம் மதகுருக்கள், ஆகியோர் நாம் புனிதப் போர் புரிந்துகொண்டிருக்கிறோம் என்றும் இந்துக்களுக்கு எதிராக ஜிகாத நடத்தி கொண்டிருக் கிறோம் என்றும், அவர்கள் எதிரிகள் என்றும் அறிவித்தனர். அவ்வாறு மூளைச்சலவை செய்யப்பட்ட நான், நானே ஒரு புனித போர்வீரன், ஒரு முஜாஹித், என்று கனவு காண ஆரம்பித்தேன்.

என்னுடைய இளம்பருவ வாழ்க்கையை திரும்பி பார்க்கும்போது, அந்த காலத்தில் ..

நான், புனித போர்களில் நம்பிக்கை வைத்திருந்தேன்.
நான், அனைத்து முஸ்லிம் அல்லாவதர்களும் எனது எதிரிகள் என்று நம்பினேன்
நான், ஒரு புனித காரணத்துக்காக என் உயிரை கொடுக்க தயாராக இருந்தேன், மற்றும்
நான் கடவுளின் பெயரில் கொலை செய்ய தயாராக இருந்தேன்.

என் வாழ்க்கையின் அந்த பகுதியை நினைத்துப் பார்க்கும்போது வெட்கமாகவும் மற்றும் சங்க டமாகவும் இன்று உணர்கிறேன்.

இந்திய பிரிவினை பற்றிய பல கதைகள் எழுதிய சதத் ஹசன் மிண்டோ என்ற நன்கு மதிக் கப்படும் மனிதநேய எழுத்தாளரால் எழுதப்பட்ட பல கதைகள் ஒரு இளைஞனான என் தீவிர வாத மற்றும் அடிப்படைவாத கருத்துக்களுக்கு சவாலாக இருந்தன . அந்த கொலைகளை பற்றி அவரது கதைகளில் ஒன்றில், அவர், “200 பேர் கொல்லப்பட்டனர் என்னும் போது, ஏன் நீங்கள் 100 முஸ்லிம்கள் சுவனத்துக்கு போவார்கள் என்றும், 100 இந்துக்கள் நரகத்தில் எரி த்து போவார்கள் என்றும் சொல்லுகிறீர்கள்? ஏன் நாம் 200 விலை மதிப்பற்ற மனித உயிர் களை இழந்துவிட்டோம் என்று சொல்வதில்லை?”, என்று எழுதினார். மிண்டோ அவர்கள் முஸ்லிம்கள், இந்துக்கள், கிரிஸ்துவர், யூதர்கள், பார்சிகள் அல்லது ஜொராஸ்டிரியர்கள் என்ற அடையாளங்களுக்கு அப்பாற்பட்டு நாம் மனிதர்கள் என்ற உணர்வை எனக்கு ஏற்படுத் தினார்.

பாக்கிஸ்தானில் உள்ள அஹ்மதியாக்கள் முஸ்லிம்கள் அல்ல என்று அறிவிக்கபப்ட்டபோதும் அவர்களது நம்பிக்கைகளுக்காக அவர்கள் தண்டிக்கப்பட்ட போதும் மற்றும் துன்பப்பட்ட போதும் நான் மிகவும் மன உளைச்சலில் இருந்தேன், நான் ஒரு அஹ்மத்தியா குடும்பத்தை சேர்ந்தவன் அல்ல, ஆனால் என் நண்பர்கள் சில பேர் அஹ்மதியாக்கள். அவர்களின் வீட்டின் மீது மக்கள் குப்பைகளை எறிந்ததை பார்த்தது என்னை காயப்படுத்தியது. சில அடிப்படை வாத மாணவர்கள் கூட எங்களது அஹ்மதியா ஆசிரியர்களது வீடுகளை தீக்கிரையாக்கினார் கள். ஷியாக்களுக்கும் சன்னிகளுக்கும் இடையேயான உக்கிரமான விரோதத்தையும், தேவ்பந் திகளுக்கும் பரேல்விகளுக்கும் இடையேயான உக்கிரமான விரோதத்தையும் பார்த்தேன். கோபம், கசப்பு மற்றும் வன்முறை என்று அனைத்தையும் பார்த்துவிட்டு, இஸ்லாம் மீதே கசப்புடன் அதற்கு விடைகொடுக்க எண்ணினேன்.

நான் பகிரங்கமாக எனது கசப்பை பகிர்ந்துகொண்டபோது, சில முஸ்லீம் அறிஞர்கள், நான் இஸ்லாமை விட்டு வெளியேறும் முன்னர், குர்ஆன் மற்றும் இஸ்லாமிய வரலாற்றை படிக்க வேண்டும் என்றும், பிரச்னை இஸ்லாமில் இல்லை, முஸ்லீம்களிடம் தான் இருக்கிறது என் றும் பரிந்துரைத்தனர்

எனவே அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நான் தீவிரமாக முதல் வசனத்திலிருந்து கடைசி வச னம் வரைக்கும் குர்ஆனை படித்தேன். எனக்கு அரபு மொழி தெரியாததால், நான் பல மொழி பெயர்ப்புகளையும் குர்ஆன் பற்றிய விளக்கங்களையும் படித்தேன். குர் ஆனையும் இஸ்லா மையும் படிக்க படிக்க, எவ்வளவு முஸ்லீம்கள் இருக்கிறார்களோ அத்தனை இஸ்லாம்கள் இருக்கின்றன என்பதையும் எத்தனை முஸ்லீம் அறிஞர்கள் இருக்கிறார்களோ அத்தனை குரான் விளக்கங்கள் இருக்கின்றன என்பதையும் உணர்ந்துகொண்டேன். சில உதாரணங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

முஸ்லீம் அறிஞர் அபுல் ஆலா மௌதூதி பரிணாமக் கோட்பாட்டை எதிர்க்கிறார், மற்றொரு முஸ்லீம் அறிஞர் அபுல் கலாம் ஆசாத் பரிணாமக்கோட்பாடுக்கு ஆதரவாக இருக்கிறார். nafs -UN-wahida என்ற வார்த்தையை பல முஸ்லீம் அறிஞர்கள் ஆதாம் என்று மொழிபெயர்க்கும் போது, ஆசாத் அதனை ஒருசெல் உயிரிகள் என்று மொழிபெயர்க்கிறார். அவற்றை அமீபா வாக கண்டு, பரிணாமவியல் கொள்கைகளுக்கும் குர் ஆனுக்கும் முரண்பாடு இல்லை என்று நிரூபிக்க முயல்கிறார். இதே போல, malaika என்ற வார்த்தையை பல முஸ்லீம் அறிஞர்கள் வானவர்கள் என்று மொழிபெயர்க்கும்போது, குலாம் அகமது பெர்வியாஜ் அவர்கள் இதனை இயற்கையின் விதிகள் என்று மொழிபெயர்க்கிறார்.

Reconstruction of Religious Thought in Islam என்ற தனது சொற்பொழிவுகளில் அல்லாமா மொஹம்மது இக்பால் அவர்கள் நரகத்தையும் சுவனத்தையும் ஒரு நிலைப்பாடுகள், அவை இடங்கள் அல்ல என்று கூறுகிறார்.

ஆதாம் ஏவாளின் கதையை ஆண் பெண்களின் கதை என்று கூறுகிறார். வெவ்வேறு மற்றும் முரண்பட்ட குர்ஆன் மொழிபெயர்ப்புகளையும் மற்றும் விளக்கங்களையும் படித்த பிறகு, ஒரு சிலர் நேரடி விளக்கங்கள், ஒரு சிலர் உருவகமான விளக்கங்கள் என்று அளிக்கும்போதும், நாம் அறிந்தது போல அரபி மொழியும் வாழும் மொழி என்பதால், சில நூற்றாண்டுகளிலேயே பெருத்தமாறுதலை அடைவதாலும்,

குர் ஆனுக்கு சரியான விளக்கத்தை அடையவே முடியாது என்ற நிலைப்பாடுக்கு வந்தேன். ஆகவே, குரான் என்பது நமது புராதன புராணக்கதைகளில் ஒன்றுதான், அது நமக்கு போதனை சொல்ல வந்த ஒரு கிராமிய இலக்கியம் என்பதையும் உணர்ந்துகொண்டேன்.

ஒரு இஸ்லாமிய அரசை உருவாக்க முனைந்த பல முஸ்லீம்கள், குர்ஆன் அடிப்படையில் சட்டங்களை உருவாக்க முயன்ற போது குரானுக்கான சரியான விளக்கம் அளிப்பது மிகவும் கடினமானது, சிக்கலானது என்பதை உணர்ந்தனர். அனைத்து முஸ்லிம்களும் ஒப்புக்கொண்ட எந்த ஒரு நபரோ அல்லது நிறுவனமோ இஸ்லாமில் இல்லை என்பதால் முஸ்லீம் உலகில் பெரும் குழப்பமே நிலவுகிறது. எதிர்பாராதவிதமாக சூழ்நிலையாக சேறு போல் தெளிவாக உள்ளது எனலாம். திருமணம் மற்றும் விவாகரத்து, ஓரினச்சேர்க்கை, அடிமைகள், சிறுபான் மையினர் மற்றும் பல உள்நாட்டு மற்றும் குற்றவியல் விடயங்கள் தொடர்பாக வெவ்வேறு மாறான முரண்பட்ட இஸ்லாமிய சட்டங்கள் நம்பிக்கைகளை பல்வேறு முஸ்லீம் பிரிவுகள் கைக்கொண்டுள்ளன.

நான் இஸ்லாமிய வரலாற்றை படித்த போது நான் இஸ்லாமில் பல மரபுகள் உள்ளன என்று உணர்ந்தேன். அங்கு முஸ்லீம்கள் அறிவொளிமிக்க மக்களாக இருந்தனர் மற்றும் ராபியா பஸ்ரி, மன்சூர் ஹல்லாஜ் போன்ற சூஃபிகள் இருந்தனர். அவிசென்னா, ராஜி, கண்டி போன்ற தத்துவ மேதைகள் கிரேக்க தத்துவியலாளர்களை படித்து மொழிபெயர்த்துள்ளனர். ஆனால், படிப்படியாக அறிவொளி மிக்க இஸ்லாம் அடிப்படைவாதமாகவும், தீவிரவாத இஸ்லாமாக வும் ஆனது. முஸ்லீம்கள் வஹாபி, சலாபி பாரம்பரியங்களை பின்பற்ற துவங்கினர். பர்வே ஸ் ஹூத்பய் தனது இஸ்லாமும் அறிவியலும் என்ற புத்தகத்தில் இந்த வார்த்தைகளை எழுதுகிறார்.

சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு, இஸ்லாமிய நாகரீகம் முற்றிலும் அறிவியல் திறனை இழ ந்தது. அப்போதிலிருந்து, ஓட்டோமேன் காலம் மற்றும் எகிப்தில் முகமது அலி காலத்தில் நட்ந்த சில முயற்சிகளை தவிர, அறிவியல் நோக்கத்தை மீட்க எந்த முயற்சிகளும் இல்லை. பல முஸ்லிம்கள் இந்த நிலையை ஒப்புக்கொண்டு இந்தற்கு ஆழ்ந்த வருத்தமும் தெரிவிக்கி ன்றனர். உண்மையில இஸ்லாம் நவீனமாகவேண்டும் என்று விரும்பும் பகுதியினரது முக்கிய வருத்தமே இதுவாகத்தான் உள்ளது. ஆனால் பெரும்பாலான பழமைவாதிகள் இதற்காக அக் கறையே படவில்லை. சொல்லபோனால், அறிவியலுக்கும் இஸ்லாமுக்கும் இடையேயான பிளவை விரும்புகின்றனர். இதன் மூலம் இஸ்லாத்தின் புனிதத்துவத்தை மதசார்பற்றவர்களி டம் தீய பாதிப்புகளிடமிருந்து காப்பாற்றலாம் என்று கருதுகின்றனர்


இஸ்லாமிய வரலாற்றை படித்துகொண்டிருந்தபோது, மதசார்பற்ற கருத்துக்களின் வரலாறு, ம்னிதநேய பாரம்பரியத்தின் வரலாறு ஆகியவற்றையும் படிக்க ஆர்வம் கொண்டவனாக் ஆனேன். இந்த பாரம்பரியங்கள் பிரபஞ்சத்தையும் மனித வாழ்க்கையையும் கடவுள் மதம் ஆகிய கருத்துக்கள் இல்லாமல் அணுக முயலும் பாரம்பரியங்கள். இந்த மதச்சார்பற்ற கருத் துக்களில் என்னை கவர்ந்தது சீனாவின் கன்பூஷியஸ், கிரீஸில் சோக்ரடீஸ், இந்தியாவின் புத்தர் ஆகியோர். இவர்களது போதனைகளின் மையக்கருத்துக்களை புத்தரது வாக்கியங்களில் பார்க்கலாம்.

ஞானவான் என்று சொல்லப்படுபவர் சொன்னார் என்பதால் எதையும் நம்ப வேண்டாம்.
பொதுவான நம்பிக்கை என்பதால் எதையும் நம்பவேண்டாம்.
புராதனமான புத்தகங்களில் சொல்லப்பட்டது என்பதால் எதையும் நம்பவேண்டாம்.
இறைவனின் வார்த்தை என்று சொல்லப்படுவதால் எதையும் நம்பவேண்டாம்.
மற்றவர்கள் நம்புகிறார்கள் என்பதால், எதையும் நம்பவேண்டாம்.
நீயே பரிசோதித்து நீயே நீதிபதியாக இருந்து உண்மை என்று உணர்ந்தால் மட்டுமே நம்பு.

ஒருவனது தனி அனுபவமே அவனுக்கு சிறந்த ஆசிரியர் என்று புத்தர் நம்புகிறார்.

சார்லஸ் டார்வின், சிக்மண்ட் பிராய்டு, கார்ல் மார்க்ஸ் மற்றும் ஜீன் பால் சார்த் போன்ற உயிரியல், உளவியல், சமூகவியல் மற்றும் இருத்தலியல்வாதிகளின் கண்டுபிடிப்புகள் கட வுள், தீர்க்கதரிசிகள் மற்றும் வேதங்களின் உதவி இல்லாமலேயே வாழ்க்கையை புரிந்து கொள்ளலாம் என்பதை எனக்கு உணர்த்தின

நாம் சமகால உலக அரசியலை ஆய்ந்தால், மனித குலம் 21ஆம் நூற்றாண்டில் ஒரு குறுக்கு சாலையில் நிற்கிறது என்பதை உணர்கிறோம். 9 / 11 துயரத்துக்கு பின்னர், அனைவரும் நுணுக்கமாக முஸ்லீம் உலகத்தை பார்த்து வருகிறார்கள் . என்னுடைய கருத்தில், ஒரு பில்லியன் முஸ்லீம்கள் பின்வரும் மூன்று சாலைகளில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்

1) அவர்கள் மத அடிப்படைவாத இஸ்லாமிய நாடுகளை உருவாக்கி, ஒசாமா பின் லேடன், ஆப்கானிஸ்தானின் முல்லா ஒமர், ஈரானி அயோத்துல்லா கொமேய்னி, ஒரு ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதம மந்திரி சுல்பிக்கார் அலி பூட்டோவை தூக்கிலிட்ட ஜியா உல் ஹக் ஆகியோரை பின்பற்றலாம். பல முஸ்லீம் நாடுகளில் இஸ்லாமிய மயமாக்கலுக்கு முக்கிய காரணம், அவை அபுல் அலா மௌதூதி, அல்குவேதாவின் தத்துவாசிரியரான சையத் குதுப் போன்ற முஸ்லீம் அறிஞர்களின் “இஸ்லாமின் மீது யாரும் ஆதிக்கம் செலுத் தக்கூடாது, அது மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்த வேண்டும். மற்றவர்கள் மீது கடுமை யான சட்டங்களை விதித்து முழு உலகமும் இஸ்லாமிய மயமாக்க முனைய வேண்டும் ” போன்ற போதனைகள்.

2) நவீன அறிவியல், உளவியல் மற்றும் தத்துவம் படிக்க ஆதரவளிக்கும் குலாம் அகமது பெர்வியாஜ் போன்ற முஸ்லீம் அறிஞர்கள் போதனைகளை பின்பற்றி, முஸ்லீம் சோசலிச நலன்புரி மாநிலங்களை உருவாக்கலாம். அப்துல் சத்தர் எதி போன்ற சீர்திருத்த வாதிகள் கனவு காணும் முஸ்லீம் நலன்புரி நாடுகள் போன்று அமைக்க விரும்பலாம்.

3) நார்வெ, ஸ்வீடன் டென்மார்க், கனடா போன்ற மதச்சார்பற்ற நாடுகளை உருவாக்கி, மதத்துக்கும் அரசுக்கும் ஒரு சுவரை கட்டி மதம் ஒருவரது தனிப்பட்ட கருத்து என்பதை வலியுறுத்தி, அது சமூகத்திற்கு வரக்கூடாது, என்பதை நிலைநிறுத்து, மதச்சார்பற்ற மனிதநேயம் மிக்க அரசை உருவாக்கி எல்லா குடிமக்களும், பெண்களும் சிறுபான்மை யினரும் சமமான குடிமக்களே என்பதை வலியுறுத்தி எல்லோருக்கும் சமமான உரிமைகளும் பொறுப்புக்களும் இருக்கின்றன என்பதை அடிப்படையாக கொண்ட அரசை உருவாக்கலாம்.

அறிவியல், தொழில்நுட்பம், தத்துவம், உளவியல் ஆகியவற்றின் முன்னேற்றங்களினால், உலகம் முழுவதும் மக்கள் மேன்மேலும் மதச்சார்பற்ற, மனிதநேய தத்துவங்களின் பின்னால் வந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை நான் பார்க்கிறேன். எந்த விதமான மதத்தையும் பின்பற்றாதவர்களின் எண்ணிக்கை 1900இல் 1 சதவீதத்திலிருந்து 2000இல் 15சதவீதமாக உயர்ந்திருக்கிறது. கனடாவில் மட்டுமே 20 சதவீத மக்கள் தங்களை நாத்திகர்களாகவும், மதம் பற்றியோ கடவுளை பற்றியோ கவலைப்படாதவர்களாகவும் மனிதநேயர்களாகவும் பதிந்துகொண்டிருக்கிறார்கள். ஸ்காண்டிநேவிய நாடுகளில் 50 சதவீதத்துக்கும் மேலாக இந்த எண்ணிக்கை இருக்கிறது.

21 ஆம் நூற்றாண்டில் அடிப்படை கேள்வி. உலகம் முழுவதுமுள்ள முஸ்லிம்கள் தங்கள் குழந்தைகளை மதரஸாக்களுக்கு அனுப்பி குரானையும் ஹதிஸ்களையும் படிக்க அனுப்பப் போகிறார்களா அல்லது நவீன அறிவியல், உளவியல் மற்றும் தத்துவம் படிக்க மதசார்பற்ற பள்ளிகளுக்கு அனுப்பபோகிறார்களா என்பதுதான். மனித குலத்தின் எதிர்காலத்துக்கு முக்கிய மான விஷயம், மத்திய கிழக்கு முஸ்லீம்கள் அடிப்படைவாத, தீவிரவாத, வன்முறை மிகுந்த இஸ்லாமிய நாடுகளை உருவாக்கப்போகிறார்களா அல்லது மதசார்பற்ற, ஜனநாயக, மனித நேய நாடுகளை உருவாக்கப்போகிறார்களா என்பதுதான்.

நான் ஒரு மதசார்பற்ற மனிதநேயனாக இருப்பதால், அவர்கள் மதசார்பற்ற மனிதநேய வாழ் க்கை முறையையும் அரசியலையும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன்

***

பின் குறிப்பு:
இக்கட்டுரையை
திண்ணையில் வாசிக்க விரும்புபவர்கள்
கீழே சுட்டியை சொடுக்கவும்
http://puthu.thinnai.com/?p=4560

***
வடிவம்: தாஜ்
satajdeen@gmail.com
10:46 PM 11/23/2011

3 comments:

புல்லாங்குழல் said...

படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோயிலா என்பார்கள். இவர் பெருமாள் கோயிலை இடிக்க ராமாயணத்தில் வழி தேடிய புண்ணியவான்.

Anonymous said...

கட்டுரையைப் படிக்கும்போது இவர் சொல்வதும் சரியோ என யோசிக்கவைக்கிறது. இதை பரவலாக விவாதித்தால் என்ன?

ஜக்ரியா said...

Anonymous சொல்வதும் யோசிக்க வைக்கிறது!!! யாராவது ஆதாரபூர்வமாக மறுக்கலாம்; மழுப்பாமல்