
இருத்தலிஸம்.
--------------------
தோண்டப்பட்ட
குழிகளிலிருந்து எழுப்பி
கட்டப்படுகிறது நம்
வாழ்வின் வசீகரங்கள்.
அடுக்கடுக்கான
வான் முட்டும்
வண்ணக் கனவுகளின்
சுதந்திரம் நொறுங்க
சிவப்புக் கம்பளம் விரிக்கிறது
ராட்சசிகளின்
பூகம்பச் சலனம்.
நிலைத்து நிற்க
பாதங்கள் பரப்பும்
விஸ்தீரணத்தின் கீழே
லோகத்தின் நில்லாமை
எதிரோட்டமாகவே இருக்கிறது.
*****
satajdeen@gmail.com
No comments:
Post a Comment