Sunday, August 19, 2007

தாஜ் கவிதைகள் - 24




மண்ணின் பாட்டு!
------------------------

- தாஜ்


கரி படிந்த சின்ன
சமையலறை தவிர்த்து
பழைய வீடு எங்க வீடு
எங்கத் தாத்தா கட்டின வீடு
மச்சு வீடு பல
வர்ணம் பூசிய வீடு
அக்கம் பக்கம் காட்டிலும்
பெரிய வீடு!



நிலைக் கதவு
உத்திரம் எல்லாமே
கலாச்சார வேலைப்பாடு.
நீள நீள தாழ்வாரங்கள் கிடக்க
படுக்கையறை ஒரு பாடு
வசீகரீக்கும்
பக்தியறைகளுக்கு
பஞ்சமே இல்லை.
பழசு பட்டை
மூடிவைக்க
பாங்கான அறைகள் உண்டு.
கொல்லைப் புறம்
அபரிமிதம்!
உற்றோர் பொற்றோர்
உடன் பிறப்புகளைப் போல்
தூர நண்பர்களிடம்
இதை சொல்லிச் சொல்லி
லாகிரியாகவே போச்சு.

***********
satajdeen@gmail.com

No comments: