Monday, August 06, 2007

தாஜ் கவிதைகள் - 22


வீட்டில் ஒரு பூனை.
-----------------------------
*
- தாஜ்
*
*
விட்டத்தின் கறுப்பில்
ஒரு நட்சத்திர சிமிட்டல்
வட்டக் குறைவாய்
ஒரு வெள்ளை மினுப்பு
சாடிப் பாயும் தருணம்
தட்டுப் பட்டது மறுபுறம்
திட்டுத் திட்டாய் வேறு நிறம்
ஓட்டம் ஓடி தாவிக் கவ்வியது
பெருத்ததொரு இரையை
நட்ட நடு இரவில் கிளைக்கும்
பூனைகளின் காலம்.
*
ஈர்த்த சுடரொளியும்
வெள்ளைத் தகிப்புமாய்
கிடைக்கப் பார்த்தவர்கள்
சிலிர்த்து உச்சத்தில் பார்க்க
வீட்டில் பரவசப் பெருமூச்சு
என் பாதம் கண்ட இடமெல்லாம்
வட்டமிட்டுத் திரிந்துவிட்டு
காலடியின் கீழிருந்து
மேலே பாய்ந்த பயத்தில்
உறவை அழைத்து கிறீச்சிட
'மியாவ் ' கேட்டது பதிலாய்!
*
*********

No comments: