Thursday, March 01, 2007

தாஜ் கவிதைகள் - 9

உயிர்மெய்.
----------------

பசுமையின் அந்தி
இலையுதிர் கோலம்.
சிதிலம் காண்
யௌவனத்தின் கூறு.
நொருங்கிக் கிடக்கும்
கரிக்கட்டைகளும்
நின்ற மரத்தின் சாட்சி.
இருள் வழியில் இடறும்
ஏதோ அது நான்.

அகமொழி மறந்த
வண்ணத்துப் பூச்சி
இடம்விட்ட மலர்களது
பக்கங்களில் வாசித்து
காற்று சுழித்த
திசையெங்கும் மிதக்க
வட்டமடித்ததெல்லாம்
ஏகமாய் உயிர்த்திருந்தபோது.

உள்முக இரைச்சலின்
பிடிப்படும் ராகமின்று
விரையத் திரும்பும்
அந்திப் பறவைகளின்
ஆனந்தம்.

*****

பின் குறிப்பு.
----------------

வெந்து தணிந்து
விண்ட பகுதிகளின்
கரிக்கட்டை கொண்டு
அடியும் நுனியுமற்றே
கிறுக்கும் கோடுகள்
பின்னலிட
புது உருவம் காட்டும்.

பிண்டம் கருகிய
முடை நற்றமும் உன்
சுவாசத்தில் அடர்ந்து
ரோமக்கால்களையும் மீட்டும்.
முடிச்சை அவிழ்க்கவும்
நீட்சியை அளக்கவும்
சோபலென்றால்
கூடுப்புழுக்கள் யென
இன்னோரு கிறுக்களில்
பிண்டம் கருகுவதைத் தவிர
வேறு என்ன செய்ய.

******

- தாஜ்..

No comments: