Saturday, November 26, 2011

பி ன் கு றி ப் பு. - தா ஜ்

வெந்து தணிந்து
விண்ட பகுதிகளின்
கரிக்கட்டை கொண்டு
அடியும் நுனியுமற்றே
கிறுக்கும் கோடுகள்
பின்னலிட
புது உருவம் காட்டும்.
பிண்டம் கருகிய
முடை நாற்றமும் உன்
சுவாசத்தில் அடர்ந்து
ரோமக் கால்களையும் மீட்டும்.
முடிச்சை அவிழ்க்கவும்
நீட்சியை அளக்கவும்
சோம்பலென்றால்
இன்னோரு கிறுக்களில் நான்
கருகி போவதைத் தவிர
வேறு என்ன செய்ய?

***
பின் குறிப்பு:
இக் கவிதை
இங்கே மறுபதிவு செய்யப்படுகிறது.
satajdeen@gmail.com

No comments: