தாஜ் கவிதைகள் - 19
ஈரம் / அல்லது / நவீன கண்ணகி. ----------------------------------------------
- தாஜ்என் பெயர்
அறிந்ததெப்படி?
யார்தான் நீங்கள்
உங்களை....
எப்படி விளிப்பது
உறவும்தான் என்ன?
இப்பொழுதும்
அந்த நட்சத்திரப்
பெருவெளிதானா......
புவியீர்ப்பு விசையை
மீறிய கணம்
துருவங்களிலும்
காந்தம் இல்லையா?
நித்தம்
கண்டக் காட்சிகள்
அகத்து உயிர்க்க
கண்களை
மீட்ட வில்லையா.....
காற்றில் கரைந்து
வாழும் யென்
பவழ மொழியில்
மௌன அலகுகள்
அதிராததும் ஏன்?
எந்த லோகம்
தாண்டினாலும்
நித்தம்
கேணியில்தானே குளியல்.....
அரண் எழுப்பி
நிழல் காக்கும்
ஊற்றுப் பெருக்கிங்கே
வற்றியா விட்டது?
மன்னிக்கனும்.....
யார் நீங்கள்?
********
satajdeen@gmail.com
No comments:
Post a Comment