// இன்னும் சில நாட்களே உள்ளன.
-----------------------------------
அன்புள்ள சாரு நிவேதிதா,
இன்னும் சில நாட்களே நான் உயிரோடு இருப்பேன். டிசம்பர் 6 வரை நிச்சயம் இருக்க மாட்டேன். அதற்கு முன் எக்ஸைல் நாவலைப் படிக்க ஏதாவது வழி இருக்கிறதா, சொல்லுங்கள்…
மோகன் ராஜ்
அன்புள்ள மோகன் ராஜ்,
எனக்கு இதுவரை என் வாழ்நாளில் வந்த கடிதங்களிலேயே என்னை மிகவும் பாதித்த கடிதம் உங்களுடையதுதான்.
ஏன் நீங்கள் இப்படி எழுதி இருக்கிறீர்கள்? தங்கள் வயது என்ன? ஏதாவது அற்புதம் நிகழ்ந்து நீங்கள் நீண்ட நாள் வாழ வேண்டும் என்று நான் வணங்கும் அய்யப்பன், ஷீர்டி பாபா, சோட்டாணிக்கரை பகவதி அம்மன், என் குருநாதர் மஹந்த்தா ஆகியோரை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
எப்படி இருந்தாலும் பிரதி கைக்குக் கிடைத்ததும் உங்களிடம் சேர்ப்பிக்கிறேன். தங்களுக்கு நான் புத்தகத்தை எப்படி அனுப்பட்டும்? முகவரி தந்தால் நேரிலேயே வந்து தருகிறேன்.
எக்ஸைல் நாவலின் 376 பக்கத்தில் கீதையிலிருந்து ஒரு ஸ்லோகம் வருகிறது. அது :
நத்வேவாஹம் ஜாது நாஸம் ந த்வம் நேமே ஜநாதிபா:
ந சைவ ந பவிஷ்யாம: ஸர்வே வயமத: பரம் (2:12)
இதன் பொருள்:
இதன் முன் எக்காலத்திலும் நான் இல்லதிருந்திலேன். நீயும் இங்குள்ள வேந்தர் யாவரும் அப்படியே. இனி நாம் என்றைக்கும் இல்லாமல் போகவும் மாட்டோம். அதாவது, ஆன்மாவுக்கு அழிவில்லை.
(கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு செய்த உபதேசம்)//
***
//தேர்தல் நடப்பதற்கு முன்னதாக எல்லா பத்திரிகைகளும் திமுக வெல்லும் என்று சொல்லிக் கொண்டிருந்த போது திமுகவுக்கு 30 சீட்டுக்குள்தான் கிடைக்கும் என்று எழுதினேன். உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன்.
இப்போது சொல்கிறேன்… இந்த முறை கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்து விடும். எனக்கு இது எப்படித் தெரியும்? தியானத்தில் கிடைத்த செய்தி.
பின் குறிப்பு: இதற்கும் என்னுடைய அரசியல் கருத்துகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை…
மேற்கண்ட பதிவை 12-ஆம் தேதி எழுதினேன். அப்போது பலரும் கிண்டல் செய்தார்கள். இப்போது 16 தினங்களில் நான் சொன்ன வாக்கு பலித்திருக்கிறது.
கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்கும் என்று திருஷ்டியில் தெரிந்ததுமே வஸந்தி ஸ்டான்லிக்கு இது பற்றிக் குறுஞ்செய்தி அனுப்பினேன்.
தாந்த்ரீகமும் மாந்த்ரீகமும் சரியாகப் பின்பற்றப் பட்டால் நமது திருஷ்டி கூர்மையாகும் என்பதற்கு இது எனக்கு இன்னும் ஒரு சான்று.
குற்றம் சாட்டப்பட்ட நிலையிலேயே ஒருவர் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பது நமது சட்டத்தில் இருக்கும் மிகப் பெரிய குறைபாடு. நாளையே அவர் செய்த குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றால் அவர் இதுவரை அனுபவித்த சிறைத் தண்டனைக்கும் அது அவருடைய வாழ்வில் ஏற்படுத்தும் துயரங்களுக்கும் யார் பொறுப்பு?
கனிமொழியை வரவேற்கிறேன். சிறையில் அவர் தியானம் கற்றுக் கொண்டார் என்று பத்திரிகைகளில் வாசித்தேன். அவர் அதை நிறுத்தி விடாமல் தொடர வேண்டும்…//
***
மேற்கண்ட
அடைப்புக் குறிக்குள் இருக்கும்
இரண்டு தகவல்களும்
சாருநிவேதிதா தனது
'சாரு ஆன்லையனில்'
24th மற்றும் 28th களில்
எழுதிய சங்கதிகள்.
அவர் என்னவோ...
சீரியஸாகத்தான் எழுதி இருக்கிறார்.
என்றாலும்,
சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
சரியாக சொன்னால்.....
இவ்வாண்டு
நான் ரசித்து சிரித்த
சிறந்த துணுக்கு இதுவாகத்தான் இருக்கும்.
இவரது
எழுத்துலக வெற்றிப் பயணம் என்பது
உற்ற நண்பன் ஒருவனை
மிகச் சரியாய்
வஞ்சித்ததில் இருந்து தொடங்குகிறது.
சாருவை
அதற்கு முன்னும்
அதற்குப் பின்னும்
நான் அறிவேன்.
ஆனாலும்
இந்த அளவுக்கு
என்னை அவர் சிரிக்க வைத்ததில்லை.
சாரு
நீங்கள் என்னென்னமோ எழுதுகின்றீர்கள்.
சரி.
ஏன் நீங்கள்
இப்படி
நகைச்சுவைத் துணுக்காய்
தொகுப்பொன்று எழுதக் கூடாது?
இப்பொழுதெல்லாம்
உங்கள் நண்பர்கள் யாரும்
தங்கள் எழுதி எழுத்துக்களைப் பத்திரப்படுத்த
உங்களிடம்
கொடுத்து வைப்பதில்லையா என்ன?
அதனால் என்ன...
விடுங்கள்.
கவலை வேண்டாம்.
நாளை ஒருவன்
அப்படி ஏமாறாமலாப் போவான்?
உங்களிடம் புத்தகம் கேட்டு
கடிதம் எழுதிய நண்பரை உடனே போய் பாருங்கள்.
அவரிடம் நீங்கள்
உங்களது புதிய புத்தகத்தை
சேர்ப்பிக்க....
அந்தச் சந்தோஷத்தில்
அவரது மூச்சே நின்றாலும் நின்றுவிடலாம்.
போய் பாருங்கள்.
அப்புறம்....
இன்றைக்கு ஜோஸிதத்திலும்
பின்னி எடுப்பவராக இருக்கின்றீர்கள்!!
நாளை..., திங்கள்கிழமை என்று
ஞாயிற்றுக்கிழமை அன்றே
மிகச் சரியாக சொல்லும்
பெரியதோர் ஞானம் உங்களுக்கு வாய்த்திருக்கிறது!!!
இப்படியே நீங்கள்
தொடர்ந்து பெயர் போடுவீர்களேயானால்
இந்தியாவே தேடும்
வல்லமைக் கொண்ட
நம்பர் ஒன்
காலக் கணிப்பாளராக
புகழ்ப்பட வாய்ப்பிருக்கிறது.
முயற்ச்சி செய்யுங்கள் சாரு.
வாழ்த்துக்கள்.
-தாஜ்
1 comment:
இந்த தாந்த்ரீகம்/மாந்த்ரீகம் மூலம் தன் பொண்டாட்டிய இன்னொருத்தான் லவட்டியும் புத்தி வல்லயே?!?!?!
அறிவுஜீவின்னா அறிவுஜீவிதான்
எக்ஸிஸ்டென்ஷியலிஸ்டா கொக்கா?
Post a Comment