- புருனோ
[ 2070லிருந்து கேட்கும் ஓர் அபயக்குரல் இது. 'லாஜிக்' இடித்தாலும்,கட்டுரையின் ஆழமும்,அழுத்தமும், அதன் மொழிநடையும் கூட போதாது என்றாலும் எழுதியவரின் மனித நேயமும், creative thoughts ம் மனதில் ஒட்டுகிறது. உலகமயமாக்கலுக்குப் பிறகு மனிதர்களின் பார்வையில் உலகம் சுருங்கிவிட்டது. மனிதகுல மேன்மைக்கு, நம் ஒவ்வொருவருக்கும் உலகளாவியப் பார்வை கட்டாய தேவையாகியிருக்கிறது. பொதுவாகவே இந்த பார்வை நாம் எல்லோருக்குமே கம்மி. ஆனாலும் அது வேண்டும். உலகளாவியப் பார்வை என்று இல்லாவிட்டாலும், எதிர்கால நலன் குறித்த சங்கதிகளில் நம் பார்வை அதிகமாகவும், தூர நோக்கு கொண்டதாக இருக்கவேண்டும்.
யதார்த்தத்தில் இன்னும் நாம் உள் வட்டத்திற்குள்தான் இருக்கிறோம். நம் நாட்டில் படித்தவர்களில் பலருக்கும் கூட எல்லாவற்றையும் விட சினிமாவும், மதமும்தான் பெரிதாக இருக்கின்றது. அடுத்து அரசியல். அது கூட பல நாடுகளில் மதத்தோடுதான் பிணைந்து கிடக்கின்றது. மனிதர்களுக்கு வருடப் போக்கில் சினிமா அலுத்து விடுகிறது. அரசியல் மீதும் அப்படித்தான். அலுப்பு மட்டுமல்ல கோபமும் கூடிக்கொள்கிறது. ஆனால், மதத்தின் மீது அவர்களுக்கு அலுப்போ, கோபமோ ஏற்படுவதில்லை. மாறாக வெறித்தனமான பிடிப்பே நிகழ்கிறது. மதத்தை 'அபீன்' என்றார் அறிஞர் பெருனாட்ஷா. அறிஞர்தான் அவர்.
மதத்தை முன் வைத்து உலகில் நடந்த புனிதப் போர்களுக்காகவும், கழுவேற்றியதற்காகவும் இன்றைய நவீன சமூகம் வெட்கமே கொள்கிறது. இருந்தும் 'மதத்தை முன்வைத்தான' தாக்கம் மக்களிடம் அகலவில்லை. வேதனையும் வேடிக்கையுமாக இன்றைக்கும் அதன் காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
பல நிலைகளில் தீர்க்கமாய் சிந்திக்கக் கூடிய என் திண்ணை நண்பர்களிடம் கூட அதன் தாக்கம் இருக்கிறது. மத காழ்ப்புணர்ச்சியோடு அவர்கள் எழுதுவதைப் பார்க்கிறபோது கஷ்டமாக இருக்கிறது. எல்லா மதங்களுக்கும் பலமான, பொருளாதாரப் பின்னணியோடான பீடங்கள் இருக்கின்றது. பிரச்சாரம் செய்வது,மேன்மைகளைப் பீற்றிக்கொள்வது, விவாதம் சொய்வது, விதண்டாவாதம் புரிவது, மானிட வர்க்கத்தின் மண்டைகளை கழுவுவது, மனிதகுலம் முன்னெடுக்கும் அடிகளை மறித்து பழமைக்குத் திருப்புவது, நாட்டு வெடிக்குண்டுகள் தயாரிப்பது, ஆயுதப் பயிற்சிகள் அளிப்பது என்று அவைகள் என்னென்னமோ செய்கிறது. சராசரிகளான நாம் ஏன் அவற்றின் மேன்மைக்குறிய பணியின் கூறுகளை கையில் எடுத்துக் கொள்ள வேண்டும்?
மதம், மனித நம்பிக்கையின் அடிப்படையிலானது. அது அவனது ஆன்மீகம் சார்ந்தது. ஒருவன் தன்னை சீறிய முறையில் வழி நடத்திக் கொள்ள அவனுக்கு உதவும் பல வழி முறைகளில் இதுவும் ஒன்றுஎன்பதில் ஐயமில்லை. இதன் வழியே முக்தியும் மோட்சமும் கிட்டுகிறது என்கிறார்கள். அவர்களது மூலை யின் விசேச மடிப்புகள் அவர்களுக்கு அப்படி ஒரு ஆருதலை, தேடியப்படியே தரும் என்பதயும் அறிவேன். தாண்டி, அன்றாட வாழ்வில் ஒருவனுக்கு மதத்தின் காரிய ரீதியான உபயோகம் என்பது பெயரளவில்தான்.
கீழே நீங்கள் வாசிக்க இருக்கிற கட்டுரை, நாளை நம் பூமியில் தலைவிரித்தாடப் போகிற தண்ணீர் பிரச்சனையைப் பற்றியது. உலகம் தழுவிய இந்த பிரச்சனைக்கு எந்த ஒரு மதகோட்பாட்டிலும் தீர்வு இருக்கும் என்று எனக்கு தோன்றவில்லை. உலக அளவில் கூட வேண்டாம், நம் சென்னை குடிநீர் திண்டாட்டத்தை தீர்க்கக் வேணும் அவைகளிடம் தீர்வு இருக்குமா என்ன? ] - தாஜ்
இது 2070 ஆம் வருடம். எனக்கு 50 வயதுதான் ஆகிறது. ஆனால் எனது தோற்றம் 85 வயதுள்ளவரைப் போல இருக்கிறது. எனக்கு கடுமையான சிறுநீரகக் கோளாறு உள்ளது. ஏனென்றால் எனக்குக் குடிக்கப் போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை. நான் நீண்ட நாள் வாழமாட்டேன் என்ற பயம் எனக்குள் இருக்கிறது. நான்இந்த சமூதாயத்தில் மிகவும் வயதானவனாக கருதப்படுகிறேன். என்க்கு ஞாபகம் இருக்கின்றது, எனக்கு 5 வயதாக இருந்தபோது எல்லாமே இன்றிருப்பதை விட மாறாக இருக்கும். பூங்காவில் நிறைய மரங்கள் இருக்கும், எனது வீட்டின் முன்னும் பின்னும் அழகான தோட்டங்கள் இருக்கும். மேலும் நான் குளிப்பதற்கு அரை மணி நேரமாவதுஎடுத்துக் கொள்வேன். இன்றோ ஒரு சிறிய துணியும் தாது எண்ணையும்(mineral oil) வைத்து எனது உடலை சுத்தப்படுத்திக் கொள்கிறேன்.
முன்பெல்லாம் பெண்களுக்கு அழகான நீளமான தலைமுடி இருக்கும். ஆனால் இப்பொழுது நாங்கள்அனைவருமே எங்களது தலையை மொட்டையடித்துக் கொண்டுள்ளோம். எங்களது தலையை சுத்தம் செய்ய தண்ணீர் இல்லாததால்தான் இந்த மொட்டை.
எனது தந்தை தனது காரினை ஒரு நீண்ட குழாயின் வழியாக தண்ணீரை பாச்சி கழுவுவார். ஆனால்இன்று எனது மகன் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது எப்படி என்று தெரிந்து வத்துள்ளான்.
எனக்கு ஞாபகமிருக்கிறது முன்பெல்லாம் தண்ணீர் சிக்கனத்தை வலியுறுத்தி வானொலி, தொலைக்காட்சி, நாளிதழ் ஆகியவற்றில் பிரச்சாரம் செய்வார்கள். ஆனால் யாரும் அதைப் பொருட்படுத்துவதில்லை. அதன்விளைவாக இன்று ஆறுகள், குளங்கள், அணைகள் மற்றும் ஆற்றுப்படுகைகளில் நீர்கள் இல்லாத நிலை.
வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. தொழிற்சலைகளில் ஒரு பகுதி சம்பளமாக குடிதண்ணீரை கொடுக்கின்றனர். குடிதண்ணீர் உள்ள கேன், துப்பாக்கி முனையில் பாதுகாக்கப்படுகிறது. உணவுகள் 80சதவீதம் சிந்தடிக்(synthetic) ஆக உள்ளது.
முன்பு ஒரு சராசரி மனிதன் 8 குவளை தண்ணீர் குடிக்க அறிவுறுத்தப்பட்டான். ஆனால் இன்றோ எனக்கு அரை குவளைதான் வழங்கப்படுகிறது. நாங்கள் இப்போது மறுபயன்பாடற்ற உடைகள்(disposal clothing)மட்டுமே அணிகிறோம். நாங்கள் தற்பொழுது கழிவுத் தொட்டிகளை(septic tank) உபயோகிப்பதில்லை. ஏனெனில்கழிவு நீர் சொல்ல தண்ணீர் இல்லை.
மக்கள் தொகை அளவில்லாமல் பெருகிவிட்டது. தோலில் ஈரப்பதம் இல்லாததால்தோல்கள் சுருங்கிஅனைவரும் வயதானவர்கள் போல் தோற்றமளிக்கிறார்கள். புறஉதா கதிர்வீச்சின் அதிகமான தாக்கத்தால் தோல்களில் மாறுதல் ஏற்படுகின்றன. ஓசான் படலமே இல்லாமல் போய்விட்டது.
தோல் புற்றுநோய்தான் ஒருவன் இறக்க முக்கியமான காரணமாக உள்ளது. தோல் பாதிப்பினால் 20வயது உள்ளவர் 40 வயதுகாரரைப் போல தோற்றமளிக்கிறார். விஞ்ஞானிகள் என்ன முயன்றும் இதற்கு இன்னும்தீர்வு கிடைக்கவில்லை. தண்ணீர் எங்கும் உற்பத்தியாவதில்லை. மரம், செடிகள் இல்லாததால் பிராண வாயுவும் சரிவர சுவாசிக்க கிடைக்கவில்லை. இதனால் இளைய தலைமுறையினர் சிந்திக்கவோ, படிக்கவோ இயலவில்லை.நிறைய குழந்தைகள் பெரிய குறைகளோடுதான் பிறக்கின்றன. அரசு எங்களை 137M3 என்ற அளவில் சுவாசிக்கஉத்தரவிட்டுள்ளது. மனிதனின் நுரையீரல் சூரிய ஒளியின்(solar power) உதவியுடன் இயங்குகிறது. காற்று மிகவும் மாசடைந்துள்ளது. ஆனால் மக்கள் சுவாசிக்கும் அளவு உள்ளது. ஒரு மனிதனின் சராசரி ஆயுட்காலம் 35 வயதுதான்.
சில நாடுகளில் இன்னும் சிறிதளவு தண்ணீர் உள்ளது. அவைகள் பயங்கர ஆயுதங்களால் பாதுகாக்கப்படுகின்றன. தண்ணீர் என்பது தங்கம், வைரத்தைவிட விலை மதிப்பு மிக்கதாக ஆகிவிட்டது.
மரங்கள் இல்லாத காரணத்தால் அமில மழை பெய்கின்றன. அணு ஆயுத சோதனைகளாலும், 20ம் நூற்றாண்டில் மாசு ஏற்படுத்திய தொழிற்சாலைகளாலும் பருவங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. நாங்கள் அன்று சுற்றுச்சூழலைப் பாதுகக்க அறிவுறுத்தப்பட்டோம். ஆனால் அன்று அதை யாரும் கண்டு கொள்ளவில்லை.
எனது இளமை காலங்களைப் பற்றி எனது மகன் என்னிடம் கேட்பான். நான் அதற்கு பசுமையான மரங்கள், செடிகள், பூக்கள், எங்கும் தண்ணீர் ஆகியவை நிறைந்திருக்கும் என சொல்வேன். மேலும் அப்போது மனிதர்கள்மிகவும் ஆரோக்கியமாக இருப்பார்கள் என்பேன். அவன் என்னைப் பார்த்து அப்பா ஏன் இப்போது எங்கும் தண்ணீர் இல்லை என்பான். அப்போது எனக்கு வார்த்தை தொண்டையை விட்டு வராது. இப்போது எங்கள் குழந்தைகள் தண்ணீருக்கு மிகப் பெரிய விலை அளிக்கின்றனர்.
நான் எப்படி மீண்டும் திரும்பச் சென்று இந்த மனித சமூதாயத்திற்கு எடுத்துரைப்பேன்? ஆனால் இன்னும் இந்த உலகைக் காப்பாற்ற காலம் உள்ளது.
***
- Cronical de los timespos/April/2002
- guzelgrubum_sucribe@yahoogroups.com
- தட்டச்சு/தகவல்: தாஜ்
- நன்றி: உண்மை/ஜூலை/2006
* பின் குறிப்பு: வடிவமைக்கப்பட்ட இக் கட்டுரை, திண்ணை வலைத்தளத்திற்கு அனுப்பப்பட்டதாம்.
satajdeen@gmail.com
1 comment:
தாஜ், அருமையான பதிவு. இயற்கையைச் சுரண்டி வாழும் மனிதனின் போக்கு அவனை எங்கே கொண்டுவிடும் என்று எண்ணுவதற்கே அச்சம் ஏற்படுகிறது.
மதம் பற்றித் தாங்கள் கூறியிருப்பவை மேற்கத்திய/கம்யூனிச சிந்தனைப் போக்கில் இருக்கின்றன. மதம் என்பதை அதிகாரம், போராட்டம் என்ற அளவிலேயே காணும் சிந்தனை மேற்கத்திய, செமிட்டிக் மதங்களிலேயே உள்ளது, கீழை நாட்டு மதங்களான இந்து மதம், பௌத்தம் இவற்றில் (பெரும்பாலும்) இல்லை. நம் பாரத நாட்டின் பண்பாடு, கலாசாரத்தில் மதம் சமுதாயத்தோடும், இயற்கையோடும், இந்த மண்ணோடுமே ஒன்றிப் பிணைந்து விட்டது. இரண்டு நாள் முன்பு கூட காவேரியில் புதுவெள்ளம் வருவதையொட்டிக் கொண்டாடும் ஆடிப்பெருக்கு விழாவை, காவேரியை விட்டு எவ்வளவோ தள்ளி வந்தாலும் பக்கத்திலுள்ள குளத்திலலேயே காவேரி அம்மனைப் பூசித்துக் கொண்டாடினோம். இன்றைக்கு சுற்றுச் சூழல் ஆர்வலர்களால் பெரிதும் பரிந்துரைக்கப்படும் பல விஷயங்கள் நம் நாட்டின் சமய மரபில் கடைப்பிடிக்கப் பட்டு அவை வாழ்க்கை முறையாகவே ஆகி விட்டன. இன்றைக்கும் நம் நாட்டின் பல சுற்றுச்சூழல் இயக்கங்கள் (ஆந்திராவின் வ்ருக்ஷ லக்ஷம், கங்கை சுத்திகரிப்பு) சமயச் சார்புடையவையே, அதனால் மதத்தை இந்த அளவு எதிர்மறையாகப் பார்க்கத் தேவையில்லை என்றே கருதுகிறேன்.
Post a Comment